ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை...
irumbuthirai
April 18, 2020
நாளை மறுதினம் திங்கள் (20) முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் (Curfew) அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
01. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கும் வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
02 கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
03. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பின்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 22 புதன் முதல் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
04. ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகள் வருமாறு,
கொழும்பு மாவட்டம் :
கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைத்தோட்டம், மரதானை, கொதடுவ, முல்லேரியாவ, வெல்லம்பிடிய, கல்கிஸ்ஸ, தெஹிவலை மற்றும் கொஹுவலை.
கம்பஹா மாவட்டம்:
ஜாஎல, கொச்சிக்கடை மற்றும் சீதுவை
புத்தளம் மாவட்டம்:
புத்தளம், மாரவிலை மற்றும் வென்னப்புவை
களுத்துறை மாவட்டம்:
பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கமை.
இந்த வகையில் கொட்டாஞசேனை, கிரேண்ட்பாஸ், பம்பலபிட்டிய, வாழைச்சேனை, மரதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை, கொஹுவலை, ஜாஎலை, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவிலை, வென்னப்புவை, பண்டாரகமை, பயாகலை, பேருவளை, அளுத்கமை, வரகாபொல, அகுரணை, அலவதுகொடை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது.
ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும்.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் முறை...
Reviewed by irumbuthirai
on
April 18, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
April 18, 2020
Rating:













