மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...
irumbuthirai
May 02, 2020
கொரோனா (கொவிட் 19) நிலைமை மேல்மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் (PCR) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும்.
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை
வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...
Reviewed by irumbuthirai
on
May 02, 2020
Rating:
