கணித பாடம் என்பது அன்று தொட்டு இன்று வரை கசப்பான பாடமாகவே பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் பதிந்த விடையமாகும். அந்த வகையில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தை விரும்பமான பாடமாக மாற்றியமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சின் கணித பிரிவு தொடங்கியுள்ளது.
கணிதம் தொடர்பான எண்ணக்கருக்களை அன்றாட வாழ்க்கையில் பிரயோகப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் செயற்பாட்டு ரீதியாக கணிதத்தை தெளிவுபடுத்துவது இதன் நோக்கமாக காணப்படுகிறது.
ஆக்கத்திறன், சிக்கல்களை தீர்க்கும் வல்லமை, தொடர்பாடல் திறன், தர்க்க ரீதியான சிந்தனை போன்ற திறமைகள் மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்யப்படும். இதற்கிணைவாக கற்றல் வள உபகரணங்களும் பயிற்சிப் புத்தகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் 150 பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
(அ.த.தி)
கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..!
Reviewed by irumbuthirai
on
August 10, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
August 10, 2019
Rating:

No comments: