அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்..



அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்படவிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி முதல் இம்மாற்றம் ஏற்படவிருக்கிறது. அதாவது ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் வருமாறு:

 தற்போதைய ஆகக் குறைந்த தேசிய சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு இல 3 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் 
2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்திற்கு அமைவாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 10,000 (ரூபா 400*25) தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளம் மற்றும் ரூபா 400 (50*8) தேசிய ஆகக் குறைந்த நாளாந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவை கவனத்தில் கொண்டு அதில் தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளமாக தற்பொழுது உள்ள ரூபா 10,000 தொடக்கம் ரூபா 12,500 வரையிலும் ரூபா 2,500 இனாலும் தேசிய ஆகக் குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 400 தொடக்கம் ரூபா 500 வரையிலும் 100 ரூபாவினாலும் அதிகரிக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சட்டத்தில் 3ஆவது சரத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கமைவாக 2016ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பள சட்டத்தின் 3ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சட்டத்திருத்த வரைவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழில் சங்க தொடர்புகள் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி)
அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்.. அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.