இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை



கடுமையான மந்தநிலையை  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்கிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 

6 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புக்கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் , 2017 - 2018 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதியாண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டான 2019 - 2020-இல் இது மேலும் 0.9 சதவீதம் குறைந்து, 6 சதவீதமாக சரியும் நிலையை அடைந்துள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. 

கடந்த நிதியாண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக அதிகரித்து இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வு மந்தமாக இருந்ததாகவும், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவன வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், விவசாயம், சேவை துறைகளின் வளர்ச்சி 2.9 சதவீதமாகவும் மற்றும்
7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளில் ஏற்பட்ட தொடர் விழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதம் சரியவும் காரணம் என தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து ஜிஎஸ்டி, உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பொருளாதார கொள்கை, அதிகபட்ச தனியார்மயமாக்கம் என்று நிறைய முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் வரிசையாக இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான பொருளாதார 

மந்த நிலையால், இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரிச்சலுகைகள், கடன் வழங்கல் அதிகரிப்பு போன்று அதிரடியாக பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2020-21 நிதியாண்டில் 6.9 சதவீதமாகவும் மற்றும் 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை Reviewed by irumbuthirai on October 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.