அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி



2020 தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து


83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தற்பொழுது உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அமைவாக இதற்கான திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபா தொடக்கம் 1,000 பில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
(அ.த.தி)
அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.