ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு...




பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
மாதிரி விண்ணப்பம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… 
நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 

26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… 
பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… 
பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு….. 
மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரிதகதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் அத்தகவல்களை உறுதிப்படுத்தி 

2020.02.20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலாளரிடம் கையளித்தல் வேண்டும். கிராம உத்தியோகத்தரினால் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்போது பிரதேசத்தில் கீழ் மட்டத்திலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களிடமும் பிரதேச மத குருமார்கள் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பிழையான தகவல்களை உறுதிப்படுத்துதலானது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.
(அ.த.தி.)

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு... ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு... Reviewed by irumbuthirai on January 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.