சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா?



எதிர்வரும் ஜூலை 6 திங்கட்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட கல்வி அமைச்சின் மூலம் அனைத்து மாகாண, வலய மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 
வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உரிய ஏற்பாடுகளை அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும். 
இதேவேளை மாணவர்களுக்கு சுகவீன நிலைமைகள் இருப்பின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. 
 மற்றும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும் போது தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு உரிய கால நேரத்தில் கற்பிக்க மாத்திரம் பாடசாலையில் இருத்தல் போதுமானது எனவும் அதிபரினால் மேலதிக வேலைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டுகிறது. 
மேலும் ஆசிரியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை என்பவற்றை பதிவிட நடைமுறையிலுள்ள ஆவணம் அல்லது தற்காலிகமாக இக்காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆவணத்தில் உரிய நேர காலத்திற்கேற்ப பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் கால நேர அட்டவணைக்கு ஏற்ப அந்தந்த ஆசிரியர்கள் நிச்சயிக்கப்பட்ட பாடவேளைகளில் கற்பித்தலை நிறைவு செய்ததன் பின்னர் பாடசாலையில் இருந்து வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. 
அதேவேளை இக்காலகட்டத்தை பாடசாலைகளில் தவணைப் பரீட்சை, விளையாட்டு அல்லது ஏனைய கல்விசாரா நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் கற்பித்தல் பணிகளுக்கு தேவையான அவசியமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அதிபர்களிடம் வேண்டி கொள்ளப்படுகின்றது.

குருவரயா.

சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா? சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா? Reviewed by irumbuthirai on July 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.