தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி



மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பால் பண்ணையாளர்களின் உதவியாளர்கள் என்ற பெயரில் கற்கை நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது தொழில் சார்ந்த கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறியாகும். 
பால் பண்ணைகளை கொண்டு நடத்துவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அந்த திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் திருமதி குமுதினி ராயநாயக்க தெரிவித்துள்ளார்.  இந்த கற்கை நெறியை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள்  தொடர முடியும். கற்கை நெறியை பூர்த்தி செய்வோருக்கு தேசிய திறனாற்றல் தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களை 0812388216 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பெறலாம்.

அ.த.தி.
தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி Reviewed by irumbuthirai on July 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.