அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு)


அரச பாடசாலைகளின் கல்விசார் ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான 22/2021 இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கௌரவம் மற்றும் அடையாளத்தினை பாதுகாக்கும் வகையில் முக்கியமான முன்னெடுப்பாக நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக இந்த வருடம் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இரண்டாம் கட்டத்தில் தேசிய பாடசாலைகளில் எஞ்சிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதற்கு அடுத்த கட்டமாகவே மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அது மாகாண கல்விச் செயலாளர் அல்லது மாகாணக் கல்விப்பணிப்பாளர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும். 
 
விண்ணப்பபடிவம் தொடர்பான தேவையான விபரங்கள் google படிவத்தின் மூலமாக மட்டுமே கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டும். 
 
புகைப்படம் அமைய வேண்டிய முறை: 

அளவு: கடவுச்சீட்டுக்குரிய அளவு.  
பின்புலம்: இள நீல நிறம். 
 
ஆடை: ஆண்கள் - கழுத்துப்பட்டியுடனான மேற்சட்டை. பெண்கள் - சேலை.  
 
முகம்: முழுமையாக நெற்றியும் மற்றும் இரு காதுகளும் தெரிய வேண்டும். 
 
ஒரு புகைப்படத்தை தகவல் படிவத்தில் கழராத வகையில் ஒட்டுவதோடு மற்றைய புகைப்படத்தை JPEG முறையில் Google விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.
 



அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.