உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு)


2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பரீட்சைகள் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதில் பெறுபேறுகளைப் பார்வையிடும் முறை, பாடசாலைகள் பெறுபேறுகளை தரவிறக்கம் செய்யும் முறை, மாகாண கல்வி பணிப்பாளர்கள் மாகாணத்திற்குரிய பாடசாலைகளின் வெறுப்பேறுகளை தரவிறக்கம் செய்யும் முறை போன்ற பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பரீட்சைக்கு மொத்தமாக 272,682 பேர் தோற்றியதோடு அதில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகைமையுடையோர்  எண்ணிக்கை 171,497 ஆகும். அதாவது 62.9% ஆனோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர். 
மேலும் 37 பாடசாலை பரீட்சார்த்திகளினதும் 12 தனிப்பட்ட பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்காக எதிர்வரும் 8ம் திகதி வரை அவாசம் வழங்கப்பட்டுள்ளது. 

பெறுபேறுகளை மீளாய்வுக்காக நிகழ்நிலை(Online) முறை ஊடாக விண்ணப்பிக்க வேண்டிய திகதி பின்னர் அறியத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஊடக அறிக்கையை கீழே காணலாம்.


Related:
 

 

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 29, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.