உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்!



2022ம் வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும். உயர்தர பரீட்சை டிசம்பர் 5 ஆரம்பமாகி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இந்த திகதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சார்த்திகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
விசேடமாக 2022 ஆம் வருடத்திற்குரிய பாடசாலை நாட்காட்டியை அடிப்படையாக வைத்து இந்த பரீட்சை தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்கப்படும் டிசம்பர் மாதத்தில் இந்த பரீட்சை நடாத்தப்படுகிறது.

யாதேனும் காரணத்தால் இந்த பரீட்சைகளை பிற்போட்டால் பாடசாலை நாட்களையும் மாற்றி அமைத்து அடுத்த வருடம் நடைபெறவுள்ள சாதாரண பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும். 

இந்நிலைமையானது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை மாத்திரமன்றி முழு மாணவ சமூகத்தையும் பாதிப்பதோடு உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் தாமதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.


உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.