மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ...

November 02, 2019

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன. வைரஸ் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் நேற்றைய தினம் கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மேலும் சில மாணவர்கள் 

மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ... மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ... Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா

November 02, 2019

2019 உலகக் கிண்ண றக்பிபோட்டியின் இறுதிப் போட்டி ஜப்பானில் இன்று இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 

32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. இதற்கமைய தென்னாபிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
(அ.த.தி)
மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்:

November 02, 2019

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து அதனை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டமை, மற்றும் அவற்றை பரிமாறிய நபர்கள், இருவர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது 

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவை மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் இருவரும் கம்பளை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை காவலாளி ஒருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன. 
(அ.த.தி)
புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்: புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்: Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

November 02, 2019

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு  வெளியிடப்பட்டுள்ளது. தொழிலில் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள சட்டத்தரணிகள் இதற்காக விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாக தகுதிகளை பூர்த்தி செய்யும் சட்டத்தரணிகள் தமது விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு அமைவாக எதிர்வரும் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ஜனாதிபதி செயலாளர் / ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01,என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 
குறித்த வர்த்தமானி கீழே இணைக்கப்பட்டுள்ளது.



app1

app2

app3
சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள்

November 02, 2019
கல்வி நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்த மடிக் கணனிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய நாடு முழுவதிலும் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் ஒரு கல்வி வலயம் வீதம் தெரிவு செய்யப்பட்டு தரம் 6 முதல் தரம் 11 வரையான 665 
பாடசாலைகளுக்கு லப்டொப் கணனிகள் வழங்கப்படும். இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். 
(அ.த.தி)
பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு எவ்வளவு தெரியுமா?

November 01, 2019

சென்னைக்கும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இம் மாதம் 10 திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்திய விமான நிறுவனமான Alliance air of india என்ற நிறுவனம் சென்னை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கும் இடையில் வர்த்தக பயணிகள் விமான சேவையை இம் மாதம் 

10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை சிவில் விமான அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விமான சேவை அறிமுகத்தை முன்னிட்டு சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஒருவழி விமான கட்டணம் இலங்கை நாணயத்தில் 7,900 ரூபா (இந்திய நாணயத்தில் 3,090 ஆகும்) என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு எவ்வளவு தெரியுமா? யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு எவ்வளவு தெரியுமா? Reviewed by irumbuthirai on November 01, 2019 Rating: 5

01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 01, 2019
01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 
அரச வேலைவாய்ப்பு, 
பரீட்சை, 
நீதமன்ற ஏல விற்பனை 
போன்ற பல விடையங்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 01-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 01, 2019 Rating: 5

அரசியல் விளம்பரங்களுக்கு தடை

October 31, 2019


டுவிட்டர் எனப்படும் சமூகவலைத்தளத்தில் அரசியல் விளம்பரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர்சமூக வலைத்தளதின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக் டோனி இது தொடர்பான அறிவிப்பைவெளியிட்டுள்ளார். அடுத்த மாதம்


முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரசியல் விளம்பரங்களுக்கு தடை அரசியல் விளம்பரங்களுக்கு தடை Reviewed by irumbuthirai on October 31, 2019 Rating: 5

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ..

October 31, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 
அரை நாள் தொடக்கம் 2 நாட்கள் வரை வழங்கலாம். 
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இது தீர்மானிக்கப்படும். 
இது தொடர்பான முழு விபரத்தையும் தூரத்திற்கேற்ப பெற முடியுமான லீவு விபரத்தையும் அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ.. அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ.. Reviewed by irumbuthirai on October 31, 2019 Rating: 5

29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 30, 2019


29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், 

யூரியாவை மேலதிகமாக இறக்குமதி செய்தல், 
முதியோர்களின் புகையிலை பாவணை தொடர்பான சர்வதேச ஆய்வு, 

'சிலோன் டி' மேம்படுத்தும் வேலைத்திட்டம், 
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விதிகள் மாற்றம், 
போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம். 
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29.10.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த

October 30, 2019


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார். வாக்களிக்கும் போது இலக்கம் ஒன்றினை பயன்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொண்டுள்ளார். 
இது தொடர்பான மேலதிக விளக்கத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? விளக்குகிறார் மஹிந்த Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள்

October 30, 2019

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்  உள்ள சகல பாடசாலைகளும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன வலயத்தில் உள்ள பாடசாலைகளும் நாளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்ட்டதாக 
தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். இப்பிதேசத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தாக ஆளுநர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினமும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள் நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள் Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5

வாக்களிப்பு நேரம் நீடிப்பு

October 30, 2019


எதிர்வரும் 16ஆம்திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் 

மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும், கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், அவர்கள் அனைவரினதும் பெயர்கள் அடங்கிய வாக்குச்சீட்டின் நீளம் 

2 அடி 26 அங்குலமாக அமைந்துள்ளதால் வாக்காளர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான காலஅவகாசம் வழங்கும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வாக்களிப்பு நேரம் நீடிப்பு வாக்களிப்பு நேரம் நீடிப்பு Reviewed by irumbuthirai on October 30, 2019 Rating: 5
Powered by Blogger.