வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள்
irumbuthirai
September 17, 2020
வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை இங்கு அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில்  நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு பின்தங்கிய பிரதேசங்களில்  ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பித்தல்  மற்றும் தேவைப்படும் ஏனைய தொழில்களுக்கும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் செயலாளர் தெரிவித்தார். 
இதுவரை இவ்வாறான 4100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் இந்த அடிப்படையில் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்களின் சேவையை உள்நாட்டில் பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள் 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
September 17, 2020
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
September 17, 2020
 
        Rating: 


















