இதுவரையான கொரோனா மரண விபரங்கள்: ஒருவர் வீதியிலும் உயிரிழப்பு
irumbuthirai
November 29, 2020
இதில் மூவர் 10 - 30 வயதிற்கும் நால்வர் 31 - 40 வயதிற்கும், 41- 50 வயதிற்கும் உட்பட்ட 16 பேர், 51 - 60 வயதிற்கும் உட்பட்ட 21 பேர் 61 - 70 வயதிற்கும் உட்பட்ட 20 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 71 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை 45 ஆக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மொத்த மரணங்களில் 81 பேர் கொழும்பு, 13 பேர் கம்பஹா, களுத்துறை 6 பேர், குருணாகலை 4 பேர், புத்தளத்தில் 3 பேர், நுவரேலியாவில் ஒருவர் மற்றும் இனங்காணப்படாத ஒருவரது மரணமும் அவற்றுள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 44 பேர் வீடுகளில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளடன் 64 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் வீதியில் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையான கொரோனா மரண விபரங்கள்: ஒருவர் வீதியிலும் உயிரிழப்பு
Reviewed by irumbuthirai
on
November 29, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 29, 2020
Rating:












