உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்
irumbuthirai
January 21, 2021
சரியானதை செய்வதற்கு எந்த கட்சியை, எந்த மதத்தை, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது. உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். எனினும், சத்தமிடுவதால்
உண்மை பொய்யாகிவிடாது கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது. நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்
Reviewed by irumbuthirai
on
January 21, 2021
Rating:
