இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி!
irumbuthirai
July 26, 2021
முறையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
73 வயதான குறித்த நபருக்கு சினோபாம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசி மே 29 இலும் இரண்டாவது தடுப்பூசி ஜூன் 28 இலும் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு சளி அதிகரித்தமையினால் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர் கொரோனாவுக்கு பலி!
Reviewed by irumbuthirai
on
July 26, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
July 26, 2021
Rating:













