கர்ப்பிணிகளுக்கு ஏதாவதொரு தடுப்பூசி வழங்க தீர்மானம்!
irumbuthirai
August 15, 2021
கர்ப்பிணிகளுக்கு சீனா தயாரிப்பான Sinopharm தடுப்பூசியை ஏற்றுவதற்கு மாத்திரமே இதற்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது Moderna, Pfizer, AstraZeneca போன்ற தடுப்பூசிகளிலும் ஏதாவதொன்றை ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணிகள் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணிகளுக்கு ஏதாவதொரு தடுப்பூசி வழங்க தீர்மானம்!
Reviewed by irumbuthirai
on
August 15, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
August 15, 2021
Rating:















