இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்?
Irumbu Thirai News
September 15, 2021
பாடசாலைகளை நிகில மீள திறப்பது தொடர்பாக இன்றைய தினம்(15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,
முதற்கட்டமாக 200-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இன்னும் இரு வாரங்களில் மீள திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
இதில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நபர்களுக்கு விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்?
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
September 15, 2021
 
        Rating: 
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
September 15, 2021
 
        Rating: 













