புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி

March 14, 2022

கடந்த ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. 
 
இந்தப் பரீட்சை தொடர்பான விபரங்கள், மாதாந்த உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி தினம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இம்முறை உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை 
20,000 என்பதுடன் அதில் 250 விஷேட தேவையுடைய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய Username, Password என்பவற்றை பயன்படுத்தி பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் செய்துகொள்ளலாம். பெறுபேறுகள் தபால் மூலமும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். 
 
புள்ளிகள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுடையோர் அது தொடர்பான மேன்முறையீட்டை 31-03-2022 ம் திகதிவரை சமர்ப்பிக்கலாம். 
 
குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.

 தொடர்புடைய செய்திகள்: 
 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி Reviewed by Irumbu Thirai News on March 14, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

March 14, 2022

2021 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்றது. இதன் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. 
 
இந்நிலையில் இதற்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் தற்போது பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 
 
சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் என்பன வெவ்வேறாக வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழ் மொழிமூல மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளில் ஆகக்கூடிய புள்ளியாக 149 ம் ஆகக்குறைந்த புள்ளியாக 145 ம் காணப்படுகின்றது. 
 
ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி இரத்தினபுரி மாவட்டத்திற்குரியதாகும். 
 
 
மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளிகள் விபரம் பின்வருமாறு. 

கொழும்பு - 149 
கம்பஹா - 149 
களுத்துறை - 149 
கண்டி - 149 
மாத்தளை - 149 
நுவரெலியா - 146 
காலி - 149 
மாத்தறை - 149 
அம்பாந்தோட்டை - 147 
யாழ்ப்பாணம் - 148 
கிளிநொச்சி - 148 
மன்னார் - 148 
வவுனியா - 147 
முல்லைத்தீவு -147 
மட்டக்களப்பு - 147 
அம்பாறை -147 

திருகோணமலை - 147 
குருநாகல் - 149 
புத்தளம்- 146 
அனுராதபுரம் - 147 
பொலன்நறுவை - 147 
பதுளை -147 
மொனராகலை - 146 
இரத்தினபுரி - 145 
கேகாலை - 149 
 
பரீட்சைத் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் விபரத்தை கீழே காணலாம். 
புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! புலமைப்பரிசில் பரீட்சை:  மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on March 14, 2022 Rating: 5

வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

March 13, 2022

2021 ம் வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22-01-2022 இல் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 340,508 மாணவர்கள் தோற்றுயிருந்தனர். அதில் தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 255,062 மாணவர்களும் அடங்குவர். 
 
வழமையாக ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இந்தப் பரீட்சை இம்முறை சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் 2,943 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது. கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் 108 அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 

(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக.
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 

Dialog 
EXAMS and send to 7777 
 
Mobitel 
EXAMS and send to 8884 
 
Airtel 
EXAMS and send to 7545 
 
Hutch 
EXAMS and send to 8888
வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on March 13, 2022 Rating: 5

11-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-03-2022

March 11, 2022

11-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
11-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-03-2022 11-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 11-03-2022 Reviewed by Irumbu Thirai News on March 11, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு!

March 10, 2022

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளைப் பகிரங்கப்படுத்த கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனை கல்விச் ஆலோசனைக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
மாணவர்கள் தமக்கான பாடசாலையை தெரிவு செய்வதற்கு இந்த வெட்டுப்புள்ளிகள் அவசியமாகின்றன. எனவே இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே இந்த எதிர்பார்ப்பை தகர்க்க வேண்டாம் என கல்வி அமைச்சருக்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் வெட்டுப் புள்ளிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்ற யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு! புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான யோசனை நிராகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை

March 10, 2022

அண்மையில் வெளியிடப்பட்ட 2020ற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. 
 
இதற்கான விண்ணப்பங்கள் 10-03-2022 தொடக்கம் 
 
18-03-2022 வரை நிகழ்நிலை (Online) முறையில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அதுதொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஊடக அறிவித்தலை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. 
 
குறித்த வழிகாட்டல்கள் அடங்கிய அறிவித்தலை கீழே காணலாம்.

சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை சா. தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் முறை Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

04-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-03-2022

March 10, 2022

04-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
04-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-03-2022 04-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 04-03-2022 Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

07.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

March 10, 2022

07.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட... 
07.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 07.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

28.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

March 10, 2022

28.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட... 
28.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on March 10, 2022 Rating: 5

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்!

March 06, 2022

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சால் கல்வியமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதுடன், வகுப்பில் ஒரு மாணவரே ஏனைய சகல மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர்

March 06, 2022

நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. எனவே இன்னும் சில தினங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும். 
 
அதேபோன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 03 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

Junior Administrative Executive (International Organization for Migration - IOM)

March 06, 2022

Junior Administrative Executive (International Organization for Migration - IOM) 
 
Post: Junior Administrative Executive 
 
Duty Station : Colombo. 
 
Monthly Salary: Rs. 97,814.83 
 
Closing Date: 13-03-2022.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
 
Junior Administrative Executive (International Organization for Migration - IOM) Junior Administrative Executive (International Organization for Migration - IOM) Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

Lecturer Vacancy (University College of Kuliyapitiya)

March 06, 2022
Lecturer Vacancy (University College of Kuliyapitiya) Lecturer Vacancy (University College of Kuliyapitiya) Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5
Powered by Blogger.