புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை


இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கு 1,858 அதிபர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:

2019.10.02 தொடக்கம் 2019.11.13 வரையில் இந்த சேவை ஆரம்ப பயிற்சி 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அமைவாக முதலாவது கட்டத்தின் கீழ் இந்த தரத்திற்கு உட்பட்ட அதிபர்களின் பயிற்சிக்காக பதிவு நடவடிக்கைகள் மஹரகம தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் மஹரகம மத்திய வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் என். எம். ரணசிங்கவின் தலைமையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 
இந்த அதிபர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்குள் ஒரு நாள் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இரண்டாவது கட்டத்தில் மாகாண இணைப்பு பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டு இரண்டு வார கால பயிற்சி வழங்கப்படும். மூன்றாவது கட்டத்தில் மாகாண பயிற்சி மத்திய நிலையத்தில் 2 வார காலம் உள்ளக பயிற்சி வழங்கப்படவுள்ளது. மூன்றாவது கட்டத்தின் கீழ் 7 கடமை நாட்களுக்கும் இந்த உள்ளக பயிற்சி அதிபர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டின் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எந்த காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படாமல் முன்னெடுக்கப்படும் என்று செப்டெம்பர் மாதத்தில் கல்வி கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்த அதிபர்கள் விரைவில் பாடசாலை கட்டமைப்பிற்குள் உள்வாங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை இதன் காரணமாகவே ஆகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

சேவை ஆரம்ப பயிற்சியை பெற்றுக்கொண்டு பாடசாலை கட்டமைப்பிற்குள் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் மூன்றாம் தர 1,858 அதிபர்களுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் சமீப காலத்திற்குள் கல்வி கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட தர அதிபர்களின் எண்ணிக்கை 5759 ஆக அதிகரிப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை Reviewed by irumbuthirai on September 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.