பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்..



இன்று (06) தொடக்கம் நிபந்தனைகள் பலவற்றின் கீழ் பல்கலைக்கழக கட்டமைப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தள்ளார். பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
கடந்த ஜுன் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. 
இன்று தொடக்கம் 2 ஆம் மற்றும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. இதற்கு அமைவாக அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுக்கு மாணவர்களை அழைப்பதற்கு முடியும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார். 
இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை கீழ் கண்ட 11 நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். 
01. ஒரு முறைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கக்கூடியவர்கள் வருடம் 2 மாணவர்கள் மாத்திரமாகும். இரண்டாம் மற்றும் 3 ஆம் வருடங்களாயின் மிகவும் பொருத்தமானதாகும். 
02. விடுதி வசதிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் வழங்கப்படுவது கட்டாயமானதாகும். விரிவுரை மண்டபங்களில் நடைமுறை வகுப்புக்கள், நூல் நிலையம் மற்றும் விரிவுரை மண்டபம் ஆகியவற்றில் 1 மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பது முக்கியமானதாகும். 
03. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது விரவுரை மற்றும் நடைமுறை வகுப்பை பூர்த்தி செய்து பரீட்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவேண்டும். 
04. பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தப்படும் எத்தகைய கல்வி நடவடிக்கைகளுக்கான காலத்தை குறைத்து ஆகக்கூடிய வகையில் 4 வாரத்திற்கு மேற்படாதவாறு அமைய வேண்டும். 
05. இறுதி ஆண்டில் மருத்துவ பீட மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியை ஆரம்பிக்க முடிவதுடன் இதற்காக சம்பந்தப்பட்ட பீடங்களின் ஆலோசனைகள் வழங்கப்படமுடியும். பல் வைத்தியம் மற்றும் ஆயர்வேத இறுதி ஆண்டு மாணர்களுக்கு செய்முறை பயிற்சியை ஆரம்பிக்க முடியும். 
06. கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தமது வீடுகளுக்கு செல்ல வேண்டும். 
07. பல்கலைக்கழக வளவில் இரவு 7.00 மணிக்கு பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் இருக்க கூடாது. 
08. விளையாட்டு, சமூக பணி அல்லது எத்தகைய ஒன்று கூடலுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 
09. அனைத்து உப வேந்தர்களும் தமது தங்குமிடங்களில் உள்ள வசதிகள் தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்துவதுடன் ஒரு முறைக்கு பல்கலைக்கழகத்திற்கு அழைக்கக்கூடிய மாணவர் எண்ணிக்கை தொடர்பாக மதிப்பீடுகளை ஆரம்பித்த பின்னர் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். 
10. உயர் கல்வி நிறுவனத்திற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாகும். 
11. பல்கலைக்கழகங்ளை சுமூகமாக முன்னெடுப்பதற்காக தேவைப்படும் கல்வி நடவடிக்கைகள், தேவையான பணியாளர்கள் குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக இந்த நிபந்னைக்கு அமைய பல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க கொவிட் 19 தொற்று நாட்டுக்குள் பரவியதனால் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட போதிலும் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

(அ.த.தி)
பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்.. பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகள்.. Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.