மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு ..



கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் மின் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதற்கும் ஆலோசனை ஒன்றை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு: 
கொவிட் 19 தொற்று நிலைமையால் 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டு மக்கள் தமது வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியேற்பட்டதால் பல துறைகளில் தொழிலில் ஈடுபட்டவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. இந்நிலைமையை கருத்தில் கொண்டு மின் கட்டணப் பட்டியலுக்கு வழங்க வேண்டிய மானியம் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடங்கிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பதற்காக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார். அதற்கமைய குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை திறைசேரி அதிகாரிகளுடன் மேலும் ஆராய்ந்து மக்களுக்கு வழங்கக்கூடிய மானியம் தொடர்பான சிபாரிசுகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை வகுப்பு அமைச்சரான கௌரவ பிரதமரிடம் வேண்டிக்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

அ.த.தி.
மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு .. மின் கட்டண சலுகை மூன்று மாதங்களுக்கு .. Reviewed by irumbuthirai on July 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.