சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில்


சாதாரண தர பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்தும் புதிய நடைமுறை இந்த வருடம் அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது அடுத்த வருடமோ அல்லது 2023ம் ஆண்டிலிருந்துதான் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
தரம் 10, 11 க்குரிய பாடத்திட்டத்திற்கான கால எல்லையை 1 வருடமும் 9 மாதங்களாக குறைத்து சாதாரண தர பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில் சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில்   Reviewed by irumbuthirai on May 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.