ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு)


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN 32 வகையைச் சேர்ந்த விமானத்தை வழங்கியமை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த விமானம் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதிக்கு உட்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு உரித்தான குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே விமான நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அந்த விமானத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மேலும் இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியமையை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி பதவி விலகியதை சபாநாயகர் உத்தியோபூர்வமாக அறிவித்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதாவது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்பதா? அல்லது சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி ஏற்பதா என்பது தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 

எவ்வாறாயினும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமும் பதவி விலக வேண்டும் என்று புரட்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அடுத்த கட்ட ஒவ்வொரு நகர்வையும் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சகலரினதும் எதிர்பார்ப்பு நாட்டுக்கு நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே!

விமானப்படை வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.