சமூக ஊடகங்களில் பிரபலமடையவும் பணம் ஈட்டவும் சிறுவர்களை ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்தும் போக்கைத் தடுக்க புதிய சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் கொண்டுவரப்படுகின்றன என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறினார்.
ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, ஆபாச மொழியைப் பயன்படுத்தத் தூண்டுவது, பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களில் ஈடுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறுவர்களின் தனியுரிமைக்கு ஆபத்து விளைவிக்க பெற்றோருக்கும் உரிமை இல்லை; ஒரு பிள்ளை பிரபலமாவதை முதிர்ச்சியடைந்த பின் அந்தப் பிள்ளையே தீர்மானிக்க வேண்டும்.
பெற்றோரின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தில் சிக்கும் சிறுவர்கள், பாதுகாப்புத் தேவைப்படுபவர்களாகக் கருதப்பட்டு எதிர்காலத்தில் சிறுவர் காப்பகங்களில் சேர்க்கப்படக்கூடும் எனவும் தெரிவித்தார்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் (NCPA) இணைந்து நிபுணர் குழு தயாரிக்கும் புதிய வழிகாட்டுதல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் அவை நடைமுறைக்கு வரும். "கிட்ஃப்ளுவன்சிங்" (Kidfluencing) போக்கைத் தடுக்க பிரான்ஸ், கலிபோர்னியா போன்ற இடங்களில் உள்ள கடுமையான சட்டக் கட்டமைப்புகளைப் போன்றதொன்றை இலங்கையில் நிறுவுவதே இலக்கு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களை பிரபல்யமடையச் செய்ய பெற்றோருக்கும் உரிமையில்லை: விரைவில் புதிய சட்டங்கள்....
Reviewed by Irumbu Thirai News
on
October 27, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
October 27, 2026
Rating:

No comments: