பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்குதல் (மத்திய மாகாணம்)



மத்திய மாகாணத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் பார்வைக் குறைபாடுள்ள 1500 மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்குதல் 

இது தொடர்பாக கல்வி அமைச்சால் மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:



எனது இல.: ED/09/02/13/04/32-ix

திகதி: 2026.10.27


பணிப்பாளர்,

மத்திய மாகாண கல்வித் திணைக்களம்,

கண்டி.


*ஜனாதிபதி நிதியத்தினூடாக இலவசமாக வழங்கப்பட்ட கண்ணாடிகளை, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம்*


01. ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரால் இது தொடர்பாக 2026.10.26 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தைப் பார்க்கவும். (கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)


02. உங்கள் மாகாணத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் பார்வைக் குறைபாடுள்ள 1500 மாணவர்களுக்கு மட்டும் கண்ணாடிகளை வழங்க முடியுமாதலால், மருத்துவ அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவ்வாறான கண்ணாடிகள் அவசியமான மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


03. இந்தக் கண்ணாடிகளைப் பெறுவதற்குத் தகுதிபெறும் மாணவர்கள், அரசாங்கத்தின் கண் மருத்துவ நிபுணர் ஒருவரிடமிருந்து பெற்ற மருத்துவ அறிக்கையுடன் வருகை தர வேண்டும்.


04. உங்கள் மாகாணக் கல்வி வலயங்களுக்கு ஏற்ப மாணவர்களின் பெயர், முகவரி, கல்வி வலயம் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியலை 2026.11.03 ஆம் திகதிக்கு முன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு தயவுடன் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பு: மேலதிக தகவல்களுக்கு, நியமிக்கப்பட்ட கல்விப் பணிப்பாளர் ஆர்.எஃப்.ஆர்.எம். ரத்நாயக்க அவர்களை 0719932325 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.


குறித்த கடிதத்தை கீழே காணலாம்:



பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்குதல் (மத்திய மாகாணம்) பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்குதல் (மத்திய மாகாணம்) Reviewed by Irumbu Thirai News on October 27, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.