Results for Politics

சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம்

April 12, 2021

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார். 
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு:

April 07, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகிள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். 
இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் தேசிய தேர்தல் 
ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு: பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு:  Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை?

March 19, 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 
இவ்வாறு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது 
தொடர்பிலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஆணைக்குழுக்கள் என்பன இவ்வாறான அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை? இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை? Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு....

March 15, 2021

தாம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
“வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில் 
பதிவொன்றை இட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 
12 இலங்கை மீனவர்கள் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 
ஆனால் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு நாள் மாத்திரம் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது என தெரிவித்த அவர் தாம் ஒரு திறனற்ற, தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட மியன்மாரில் தமக்கு அறிமுகமானவர்கள் எவரும் இல்லை எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
எவ்வாறாயினும், மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

March 03, 2021

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணி கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் 
நேற்றுடன் (02) முடிவடைந்தன. 
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

January 07, 2021

2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் வாக்காளர் ஒருவராக பதிவு செய்த நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சித்துக்கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.


தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர்

January 05, 2021

அபே ஜன பல பக்ஷய (எங்கள் மக்கள் சக்தி கட்சி)யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அத்துரலியே ரத்தன தேரர், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (5) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 
ரத்தன தேரர் இதற்கு முன்னர் 
ஜாதிக ஹெல உருமய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 03 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர் நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த  ரத்தன தேரர்  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

December 31, 2020

மாகாண சபை தேர்தலில் தமிழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை ஒதுக்குவதற்கு ஆளும்கட்சி தவறினால் 
தனித்து பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
The Hindu பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், 
கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கபட்டதாக கூறிய அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்:

December 31, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
அதில், புதிய அரசியல் கட்சிகளை ஜனவரி முதல் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் நிமல் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். 
இதேவேளை மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்காக 
4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும். அதே தினம் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உடனான சந்திப்பும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு...

December 30, 2020

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 - 08 வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். 
Covid-19 சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்படும். ஜனவரி 06, புதன்கிழமை மு.ப. 10.00 - 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான 
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 கொரோனா பரவல் காரணமாக கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல், பாராளுமன்றம் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்..

December 26, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீண்டெழும் வீதத்தை மையமாகக் கொண்டு கூறப்படும் 
எதிர்வுகூறலின்படி, பொருளாதார வளர்ச்சியில் சீனா இன்னும் 8 வருடங்களில் அமெரிக்காவை பின்தள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுகள் தொடர்பான நிலையத்தின் வருடாந்த அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்...

December 19, 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்தை கைவிட வலியுறுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விருப்பதாக நம்பகமாக தெரிய வருகிறது. 
ஏற்கனவே இது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சாதகமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... கொரோனா ஜனாஸா விவகாரம்... ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்..

December 18, 2020

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபே ஜனபல பக்ஷய / எங்கள் மக்கள் சக்தி / Our People's Power Party (OPPP) கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. 
 இதற்காக கட்சி சார்பாக நியமிக்கப்படும் உறுப்பினரின் பெயரை அனுப்புவதற்கான இறுதி தினத்திற்கு முந்தைய நாள் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனார். 
அதன் பின்னர் தானே அந்த பதவிக்கு பொருத்தமானவர் என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 
இதேவேளை ஞானசார தேரர் 
மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் இந்த பதவி தமக்கே வேண்டுமென முயற்சித்தனர். அந்தவகையில் இதற்காக மும்முனை போட்டி நிலவியது. 
தற்போது இவ்வளவு நாட்களாக இழுபறியாக இருந்த இந்த விடயம் முடிவுக்கு வந்துள்ளது. 
குறித்த தேசிய பட்டியல் உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று விசேட வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது. இதேவேளை ரத்ன தேரருக்கு எதிர்கட்சியில் ஆசனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு)

December 18, 2020

MCC உடன்படிக்கையில் இலங்கை ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
அதாவது, இந்த விடயத்தில் இலங்கையின் ஈடுபாடு குறைந்ததன் காரணமாக இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த ரூபா 89 பில்லியன் பெறுமதியான MCC அபிவிருத்தி நிதி உதவித் திட்டத்தை நிறுத்த MCC பணிப்பாளர் சபை இம்மாதம் 15ஆம் திகதி தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 இருப்பினும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு Covid உட்பட ஏனைய விடயங்களிலும் அமெரிக்கா தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு:

November 22, 2020

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசியல் களத்தில் Top Ten List இல் முதலில் இருந்த கொரோனா விவாகாரம் இவ்வாரம் கொஞ்சம் சறுக்கியிருந்தது. 
கடந்த தொடரின் இறுதியில் நாம் குறிப்பிட்டிருந்தது போல வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் கொரோனா விவகாரத்தை தள்ளி முக்கிய செய்திகளாக இடம் பிடித்தன. 

 #முப்பெரும் விழா கொண்டாடிய அரசு
கடந்த வாரம் அரசுக்கு மிக முக்கியமான வாரமாக அமைந்தது. மூன்று முக்கிய நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து ஒரு வருடம் பூர்த்தியாதல், SLPP அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75 ஆவது பிறந்த தினம் என்பனவே அம்மூன்று விடயங்களுமாகும். 

#அனுராதபுரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் மத நிகழ்வுகள் மாத்திரம் நடைபெற்றன. இதற்கென ஜனாதிபதி, பிரதமர் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை அனுராதபுரத்தில் தங்கினர். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும், பிரதமர் மஹிந்த வணிகரான முதித குணசேகரவின் வீட்டிலும் தங்கினர். 
பிரதமர் மஹிந்தவை சந்திக்க மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தந்ததுடன், ஜனாதிபதியை சந்திக்க யாருமே செல்லவில்லை. 
அடுத்த நாள் இவர்கள் இருவரும் தனித்தனியாக மத சடங்குகளில் ஈடுபட்டனர். மஹிந்த முதலில் புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்க சென்றார். அவருடன் மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளான SM சந்திரசேன, துமிந்த, ஷெஹான், ஆகிய அமைச்சர்களோடு, முன்னாள் வடமேல் மாகாண முதல்வர் SM ரஞ்சித் உம் இணைந்து கொண்டனர். 
 அதனைத் தொடர்ந்து அங்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் மாத்திரம் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அனுராதபுரத்தில் உள்ள 8 தலங்களுக்கும் ( அட்டமஸ்தான) இவர்கள் வெவ்வேறாகவே சென்ற போதிலும் மிரிசவெடிய விகாரையில் நடைபெற்ற பூஜையில் இணைந்து கலந்து கொண்டனர். 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
இவ்வார அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 9 மணி வரை நீண்டு சென்றது. அதிகமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை இவ்வார கூட்டம் மிக நீண்டு செல்ல காரணமாக அமைந்தது. 

** மீண்டும் சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்** 
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கோவிட் 19 காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல் பரவி பாரிய சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. 
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவசங்ச இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி முக நூலில் இட்டிருந்த பதிவு ஒன்றே காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். 
அதனை மறுத்த அலி சப்ரி தான் அவ்வாறு எந்த பதிவையும் இடவில்லை என்றும், முடிந்தால் தான் இட்ட அவ்வாறான பதிவு ஒன்றைக் காட்டுமாறும் அமைச்சர் விமல்க்கு சவால் விடுத்தார். 

 **டக்ளஸ், விமல் இன் ஆயுதங்களுக்கு ஏற்பட்ட சோதனை
ஆயுதங்கள் தொடர்பான ஒரு தொல்பொருள் காட்சிச்சாலையை உருவாக்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்திருந்தார். 
இலங்கையின் பாரம்பரிய ஆயுதங்கள், சம்பிரதாயப்பூர்வமாக பரம்பரை பரம்பரையாக வீடுகளில் உள்ள ஆயுதங்களை திரட்டி இதனை பிரதமர் முன் மொழிந்தார். இதன் மூலம் இவற்றை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச "அப்படியென்றால் அதில் டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்திய ஆயுதங்களையும் வைக்கலாம்" எனக் கூற குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே "ஏன் டக்லஸ் இனுடையது மட்டுமே. விமல் பயன்படுத்தியதைக் கூட வைக்கலாமே" என்று குறிப்பிட்ட ஒட்டு மொத்த அமைச்சரவையும் சிரிப்பலையால் நிறைந்தது. 

**சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு பதிலளிக்க தயாராகும் அரசு** 
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. 
அரசுக்கு எதிரான சில சக்திகள் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு சேறு பூசி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செய்ய முடியுமான சகலதையும் செய்திருக்கும் நிலையில் கோவிட் பாதிப்பினால் மக்கள் வீதிகளில் இறந்து விழுவது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் உட்பட அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 
இறுதியாக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 

#நிதியமைச்சர் மஹிந்தவின் சாதனை
கடந்த 17 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச. இது அவர் சமர்ப்பிக்கும் 11 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதற்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை மஹிந்த சமப்படுத்தினார். 
அத்துடன் இம்முறை மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கையின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதனை சமர்ப்பித்த மறுநாள் சமர்ப்பித்தவரின் 75 ஆவது பிறந்த தினம் வந்தமை விதியின் விளையாட்டு என்று அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார். 
 #வரவு செலவுத் திட்ட உரை
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக பிரதமர் பி.ப 1 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். சபை முதல்வர் தினேஷ், ஆளும் கட்சி பிரதம கொரடா ஜோன்ஸ்டன் ஆகியோர் அவரை வரவேற்றனர். 
உரை ஆரம்பம் செய்வதற்கான சுப வேளை பி.ப 1.40 க்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமையால் பிரதமர் நேரடியாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கே நிதியமைச்சின் செயலாளர் ஆடிகல மற்றும் சில அமைச்சர்களோடு கலந்துரையாடினார். சரியாக 1.40 க்கு பிரதமர் உரையாற்ற ஆரம்பித்தார். இந்த உரை சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் அளவுக்கு நீண்டு சென்றது. 
 வழக்கமாக உரையின் பின்னால் நிதியமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துபசாரம் இம்முறையை உரையின் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதில் பரவலான பங்குபற்றல் இடம்பெறவில்லை. சுமார் 10 வருடங்களாக இந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றாமல் இருந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இம்முறை தனது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்து கலந்து கொண்டார். 

 #பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் இவ்வாரம் கொண்டாடப்பட்டன. இவர்களில் பிரதமரின் பிறந்த தினம் மிக முக்கியமானதாக இருந்தது. பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அபயாராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் ஏற்பாடு செய்திருந்த பாட்டிமாருக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று அபயாராமவில் நடைபெற்றது. 
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்க சென்ற பிரதமருக்கு SLPJP இன் மொட்டு சின்ன வடிவில் பிறந்தநாள் கேக் தயாரித்து வழங்கி அசத்தினார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. கேக் வெட்டிய மஹிந்த முதல் துண்டை பிரசன்னவுக்கு வழங்கி மகிழ்ந்தார். 
 இது தவிர ஆளும் கட்சி உறுப்பினர்களான பிரேம்நாத் தொளவத்த, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரின் பிறந்த தினங்களும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டன. பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர் உறுப்பினர்கள். 
அரசியலமைப்பின் 20 ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்த அரவிந்த் குமார் இன் பிறந்த தினமும் இவ்வாரம் வந்திருந்தது. இவ்வாரம் இடம் பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் அவர் முதல் முறையாக கலந்து கொண்டார். அங்கே அவருக்கு ஒரு பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். பல ஆண்டுகள் நான் எதிர்க்கட்சியின் இருந்தேன். ஆனால் எனக்கு இவ்வாறான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. காலையில் பிரதமர் நேரடியாக என்னை வாழ்த்தினார். நான் அடைந்த மிகச்சிறந்த பிறந்தநாள் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அரவிந்த குமார். 

 #சஜித் ஐ சந்திக்க வந்த விருந்தினர்
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வருகை தரும் போது அவரை சந்திக்க ஒரு விருந்தாளி காத்திருந்தார். 
அவர் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐதேக சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய. சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் அவர் வருகை தந்திருந்தார். அவருடன் சுமார் அரை மணிநேரம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றத்துடன், SJB இன் புத்திஜீவிகள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ள முன்வருமாறு சஜித் வேண்டிக் கொண்டார். அதன் பின்னர் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவோடும் கிரிஷ்மால் கலந்துரையாடினார். 

 #குறைகேள் எதிர்க்கட்சி
கிரிஷ்மாலுடன் கலந்துரையாடிய சஜித் நேரடியாக சென்றது தொலைபேசி அழைப்பு நிலையத்திற்காகும். கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளமை குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு எதிர்பாராத மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக ஹரீன், மனுஷ, மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் போன்றோர் தொடர்ந்து மக்களின் குறைகளைக் கேட்டு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் குறைகளை பாராளுமன்ற உறுப்பினர்களே நேரடியாக கேட்டு பதிவு செய்து வருகின்றனர். 
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த சஜித் இந்த செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். நீண்ட நேரம் மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்த அவர் "இவ்வாறு பதிவு செய்யும் விடயங்கள் ஒரிஜினல் ஐ இங்கே வைத்துக் கொண்டு பிரதி ஒன்றை எனக்கு தாருங்கள். வண்டியில் செல்லும் போது வாசித்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்" எனத் தெரிவித்தார். 
"பாராளுமன்ற கூட்டம் உள்ளது. இல்லையென்றால் நாள் முழுவதும் இருந்து பொது மக்களின் குறைகளைக் கேட்டிருப்பேன்" என்று சொன்ன எதிர்க்கட்சி தலைவர் சஜித், குறித்த செயற்பாடு இடம்பெறும் பொறிமுறை தொடர்பிலும் ஹரீனிடம் விபரங்களை கேட்டறிந்தார். "நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் இங்கே வருகிறோம். மக்களின் குறைகளை கேட்கிறோம். அவற்றை பதிவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அதன் பின்னர் உரிய தரப்பிற்கு அவற்றை வழங்கி தீர்வினை வழங்க தேவையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம்" என ஹரீன் விளக்கினார். 
 "இந்த வேலை அரசுக்கு மிகுத்த பாதிப்பை உருவாக்கியுள்ளது. இன்று நாம் மக்களின் குறைகேள் அதிகாரிகளாகியுள்ளோம்."என்று சஜித் கூறினார். 

 #பச்சை மீன் சாப்பிட்ட திலீப்
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியைத் தொடர்ந்து இலங்கையின் மீன் விற்பனை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் சிறிய, பெரியாளவிலான மீன் வியாபாரிகளின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னமும் மக்கள் மீன் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 
இந்நிலையில் மீனவர்களுக்காக துணிந்து குரல் கொடுத்தால் SJB பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி. "மீன் சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவும் என்று சிலபேர் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையில் அது பொய். அதனை நிரூபிக்க நான் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டுகிறேன் என்று தெரிவித்த திலீப் தான் கொண்டு வந்திருந்த மீனின் ஒரு பகுதியை பச்சையாக உண்டு காட்டினார். இவ்விடயம் ஊடகங்களில் வெளியானது. சிலர் இதனை மோசமான செயலாக கூறினார். 
 இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் "உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மீனவ சமூகம் மிக சிக்கலான நிலைமையில் உள்ளது. அரசு அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இவ்வாறான நிலையில் அவர்களுக்காக பேச நீங்கள் முன் வந்துள்ளீர்கள்" என்றார். 
"பச்சையாக மீன்களை உண்ணும் வழக்கம் ஜப்பான் உட்பட கீழைத்தேய நாடுகளில் உள்ளது. இது தெரியாத சிலர் இதனை விமர்சனம் செய்கின்றனர்." என மனுஷ எம்பி கூறினார். 
"திலீப் பயமில்லாமல் செய்த இவ்விடயம் மிகப்பெரிய ஒரு விடயம். அரசு செய்ய வேண்டிய வேலையை நாம் செய்துள்ளோம். இது பையாக்களுக்கு (மொட்டு கட்சியினரை குறிக்க பயன்படும் சொல்) நகைச்சுவையாக இருந்தாலும் சர்வதேச ஊடகங்களில் நல்ல விதமாக எடுத்துக் கொள்வார்கள்" என்று எதிர்வு கூறினார் ஹரீன். அவர் சொன்னவாறே சர்வதேச ஊடகங்கள் பல இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. 

#ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்த சஜித்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பாரிய வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்றில் தெரிவித்தார் சஜித். 
"இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. அரசின் தோல்வி ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அடக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அவர்களை சிறைக்கு அனுப்ப கொண்டு செல்லும் ஊடக வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஒரு போதும் நாங்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அதற்கு எதிராக நாம் போராடுவோம். அரசியலமைப்பை ஒரு முறை படிக்குமாறு அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எந்த வகையிலான ஊடக அடக்குமுறைக்கு அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு நாங்கள் எதிராவோம். அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அரசு மீறுகிறது" என காரசாரமாக விமர்சனம் செய்தார். 

 #பட்ஜெட் பற்றிய எதிர்க் கட்சிக் கூட்டம்
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி சமரதுங்க உட்பட அறிஞர் குழாம் ஒன்று வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தனர். "இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு உணரத்தக்க எந்த சலுகையையும் அரசு வழங்கவில்லை" என கலந்துரையாடலை ஆரம்பித்தார் இரான் எம்பி. 
 "அரசு நாம் பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து பேசுகிறது. நாம் ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொண்டதை விட அதிகமாக கடந்த ஆண்டில் கடன் பெறப்பட்டுள்ளது" என்று அசோக் எம்பி கூறினார். 
 "இந்த அரசாங்கம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேலை செய்கிறது. வெளிநாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை ஒரு வீத தண்டப் பணத்தை செலுத்தி நாட்டிற்குள் கொண்டு வர வரவு செலவுத் திட்டத்தினுடாகவே முன் மொழியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான கறுப்புப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதிக்கும் உத்தியோகபூர்வ ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார் கலாநிதி ஹர்ஷ எம்பி. இதே நேரம் சஜித் பொருளாதார விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் விளக்கங்கள் கோரி தெளிவு பெற்றுக்கொண்டார். 

 #அனுர குமாரவின் பாராளுமன்ற உரை
பாராளுமன்றத்தில் எப்போதுமே சிறப்பான உரைகளை ஆற்றுபவர் ஜேவிபி தலைவர் அனுர. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்தார். 
குறிப்பாக இலங்கை 5 விதமான பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக உதாரணங்களுடன் விளக்கிய அவர் சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு இந்நிலையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். 
 1974 ல் இலங்கையிலும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நாணயத் தாள்களை பாவனையில் இருந்து அகற்றி கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தது போல் அல்லாமல் 1 வீத தண்டம் செலுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். 
அத்துடன் கடன், தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகிய இரண்டும் தவிர வேறு அரசிற்கு மார்க்கங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மொத்த தேசிய உற்பத்தியின் விகிதமாக அரச வருமானத்தின் விகிதத்தை சுட்டிக்காட்டிய அனுர எம்பி வலயத்தில் ஏனைய நாடுகள் மற்றும் உலகின் பல நாடுகளோடு ஒப்பிட்டதுடன் இலங்கை எந்தளவு பின்தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். 
அத்துடன் மொத்த அரச செலவினத்தில் 28% மட்டுமே அரசின் வருமானங்கள் என்றும் இதற்கான தீர்வுகள் அரசிடம் இல்லையென்றும் கூறினார். புகழ் பெற்ற டைட்டானிக் விபத்தின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறி அவர் உரையை நிறைவு செய்தார். "பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கடலில் மூழ்க சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் சென்றது. அந்த இரண்டரை மணித்தியாளங்களும் கப்பலில் இருந்த வாத்தியக் குழுவினர் இசைத்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறே இலங்கையும் கடன் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் உரையை நிறைவு செய்தார். 

 #ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய யாப்பு
எங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியை வாங்கியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. இதன் யாப்பு எங்கள் தேசிய முன்னணியின் யாப்பாகவே இருந்தது. கட்சியின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு யாப்பை திருத்தி புது யாப்பு ஒன்றை உருவாக்க செயலாளர் ரஞ்சித் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு ஆரம்ப கட்ட யாப்பு முன்மொழிவை தயாரித்து முடிந்துள்ளது. இதனை கட்சி மேலிடத்திற்கு வழங்கி அவர்களின் ஆலோசனையின் பின்னர் பூரணப்படுத்தப்படும். 
SJB இற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனவரி மாதம் ஆரம்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது. 

 #கொழும்பில் தரித்த ருவன்
பிரயாண கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாரம் ஐதேக பிரதித் தலைவர் ருவன் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். எனினும் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. கம்பஹா மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வாயிலாக தமது குறைபாடுகளை முன்வைத்தனர். 
5000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்கும் சிரமங்களை பல குறிப்பிட்டனர். அவற்றை பொறுமையாக கேட்ட ருவன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

 #பாடசாலை மீள ஆரம்பம்
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தமையைத் தொடர்ந்து அது தொடர்பான வாத விவாதங்கள் சூடு பிடித்தன. 
தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளை மையப்படுத்தி புதிய கொத்தணி ஒன்று உருவானால் பொறுப்பேற்பது யார் என்ற தொனியில் கல்வி சார் தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்தன. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்யும் வாகன உரிமையாளர் சங்கமும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. 
இவை இவ்வார நடவடிக்கைகளே. அடுத்த வாரம் புதிய தலைப்புகள் சூடு பிடிக்கலாம். ஏனைய தலைப்புகளை மிஞ்சி கொரோனா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கலாம். பாடசாலை ஆரம்பித்தல் விவகாரம், வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் போன்ற தலைப்புகள் பேசப்படலாம். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...

November 18, 2020

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டத்தை நேற்றையதினம் (17) நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார். 
அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக... 

  • 5.5% பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். 
  • கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 
  • 2021 ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்மொழிவு. இதை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
  • பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு. 
  • ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25% ஆல் குறைவடைந்துள்ளது.  வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
  • பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை. 
  • விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை 05 வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
  • 2021 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50% வருமான வரி சலுகை. 
  • Covid-19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம். 
  • பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் காலநிலை தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படும். 
  • சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும். 
  • தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல் 
  • தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு 
  • மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை. 
  • மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி. 
  • திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி. 
  • நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 1,500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம். 
  • பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை. 
  • வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை. 
  • அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கு தடை. 
  • குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது. 
  • வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள். 
  • சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு. 
  • சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி. 
  • உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
  • கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டம்.
  • கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள். 
  • இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடல்.
  • அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7% மாக குறைக்கப்படுகிறது. 
  • அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு. 
  • மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும். 
  • 25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு, 
  • இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு.
  • கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்.
  • இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கம்.
  • எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
  • 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 1,886 பில்லியன் ரூபாவாகும் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3,441 பில்லியன் ரூபா. வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.
  • Irumbuthirainews
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு

November 15, 2020

கடந்த வாரங்களைப் போலவே இவ்வாரமும் வேறு அரசியல் தலைப்புகள் நடைபெற்ற போதிலும் அவற்றை விஞ்சி கொரோனா முக்கிய பேசு பொருளானது. 
எனினும் முஸ்லீம் ஜனாஸா விவகாரத்தை முக்கிய விவாதப் பொருளாக சமூகத்தில் மாற்றுவதற்கு சில ஊடகங்கள் வலிந்து களமிறங்கியிருந்தன. 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
வழமை போன்று இவ்வார அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இவ்வாரமும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வருவது குறித்து பேசப்பட்டது. 
அமைச்சர் அலி சப்ரி முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான விடயங்களை சபையில் முன்வைத்தார். முஸ்லீம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கையையும், அதன் நியாயத் தன்மையையும் முன்வைத்தார். எனினும் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. 

 #சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்
முஸ்லீம் ஜனாஸா விவகாரம் கடந்த வாரத்தில் பேசுபொருளாக மாறும் என்று நாம் கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் இவ்விவகாரம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கே என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் யாருக்கும் தெரியாத நிலையில் அகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி அவர்கள் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக கூறிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்தது. 
அதனைத் தொடர்ந்து அதன் எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்தன. சாதகமாகவும், பாதகமாகவும் என்று இழுபட்டுச் செல்ல மறுநாள் காலை செய்திப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் இவ்விடயம் பேசு பொருளாக்கப்பட்டது. 
ஆர்ப்பாட்டம் செய்ய தயாரான இயக்கங்கள் நன்றிக் கடிதம் எழுதின. கட்சி தாவியோரின் ரசிகர்கள் தங்கள் தலைவரால் கிடைத்த வெற்றி என்று மார்தட்டினர். தடை செய்யப்பட்ட போது அமைதி காத்த ஆளும் கட்சி உள்ளூர் அரசியல் அல்லக்கைகள் தமது ஆட்சியால் முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைத்ததாக கதையளந்தனர். சிலர் இனவாதிகளுடன் மல்லுக்கட்டினர். இனவாதிகள் இனவெறியை கக்கினர். நடுநிலை சிந்தனை கொண்டோர் அமைதியாக நிதானம் காக்க வேண்டினர். மதியமாகும் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லி எல்லா சந்தோசம், கவலைகளுக்கும் ஆப்பு சொருவியதோடு இவ்விவகாரம் நின்று போனது. 
வெற்றிக் கொண்டாட்டம் போட்டோர் மீண்டும் கட்டிலுக்கு அடியில் பதுங்கினர். இனவெறிக் கூட்டம் வெற்றி எக்காளமிட்டது. அத்துடன் புவியியல் பேராசிரியரை அழைத்து வந்து நுண்ணுயிர் பரவல் தொடர்பில் நிகழ்ச்சி நடாத்தி பஞ்சாயத்து நடத்தினர் சில தொலைக்காட்சி சேவையினர். வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்படும் என்று கட்சி தாவிய இளம் MP எம்பிக் குதித்தார். ஆனது எதுவும் இல்லை. 

#பசிலை பாராளுமன்றத்திற்கு அழைத்த பின்பரிசை எம்பிக்கள்
ஜனாதிபதி, பிரதமரின் சகோதரரும் முன்னாள் அமைச்சரும் SLPP இன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு வருமாறு கோரி ஆளும் கட்சியின் பின்வாரிசை உறுப்பினர்கள் 19 பேர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 
தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பசில் உள்ளதுடன், சீரழிந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பாரானுமன்றத்தில் பசிலின் பிரசன்னம் அவசியம் என்று அவர்கள் கோரியுள்ளனர். 

 #பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனம்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக பெரும்பாலும் மாவட்டத்தின் ஆளும் தரப்புசிரேஷ்ட அரசியல் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது. 
ஆனால் இம்முறை மிக அதிகமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் காணப்பட்டதன் காரணமாகவும், வரையறுக்கப்பட்ட அமைச்சுப் பதவிகளையே வழங்க முடியும் என்பதாலும் அமைச்சுப் பதவிகளை ஏற்காத இளம் அரசியல்வாதிகள் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 
அவர்கள் மாவட்டத்தின் ஏனைய இளம் உறுப்பினர்களுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் செயலாற்றுவதாக பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் முறையிட்டு இருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேச அபிவிருத்தி குழுக்களை உருவாக்கி, அதன் தலைவர்களாக அவர்களை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. 
அதன் முதல் கட்டமாக பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். 

 #சூடு பிடித்த கட்சித்தலைவர் கூட்டம்
பாராளுமன்றத்தில் கட்சித்தலைவர் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த வாரம் மற்றும் இவ்வார பாராளுமன்ற கூட்ட ஒழுங்குகள் தொடர்பில் கலந்துரையாடல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. 
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஒருநாள் விவாதத்துடன் நிறைவு செய்ய ஏற்கனவே அரசு தீர்மானம் செய்திருந்தது. எனினும் எதிர்க்கட்சி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, கொரோனா தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதம் ஒன்றைக் கோரி பெற்றுக்கொண்டது. 
அத்துடன் 2020க்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் (17 ஆம் திகதி) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான விவாதத்தை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள ஆளும் தரப்பு திட்டமிட்டிருந்தமை தொடர்பிலும் கடந்த வார கட்டுரையில் அலசியிருந்தோம். கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயத்தை ஆளும் தரப்பு முன்வைத்த போது எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்க்கட்சிக்கானது என்றும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தரப்பு சொல்ல, கோவிட் 19 நிலைமையில் சிரமமானது என்று ஆளும் கட்சி சொல்ல கடும் வாத விவாதங்களின் முடிவில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
புதன்கிழமை மீண்டும் கூடிய நிலையில் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை 4 நாட்களில் இருந்து 5 நாட்களுக்கும், குழுநிலை விவாதத்தை 6 நாட்களில் இருந்து 15 நாட்கள் என்ற அடிப்படையிலும் அதிகரிக்க ஆளும் தரப்பு இணங்கியதை தொடர்ந்து விவகாரம் நிறைவுக்கு வந்தது. 

#இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது
கோவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. 
எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பு மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றது. இலங்கை சனத்தொகையில் 20% கு குறித்த மருந்தை வழங்க இலங்கை அரசு கோரியுள்ளது. முறையாக உறுதி செய்யப்படாத இந்த மருந்தை பயன்படுத்தல் தொடர்பில் SJB இன் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. "இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் அங்கே கூறினார். தேவையான மருந்தை போதுமான அளவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் அதனை தேவையுடைய எல்லோரும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 #சூடு பிடித்த அண்டிஜன் பரிசோதனை
இலங்கையில் கோவிட் தொற்றினை இனம் கண்டு கொள்ள PCR பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் உலகில் சில நாடுகள் அண்டிஜன் பரிசோதனையையும் பயன்படுத்துகின்றன. இப்பரிசோதனை இலங்கையில் நடைமுறையில் உள்ள ஒன்று அல்ல. 
இந்நிலையில் 100,000 அண்டிஜன் பரிசோதனை Kit களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இவை கிடைக்கப் பெறுவதற்கு சில நாட்கள் கடக்கும் என்ற நிலையில் அண்டிஜன் பரிசோதனை Kits ஒரு லட்சத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு விலை மனுக் கோரியுள்ளது. 
இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அரசுக்கு மிக நெருக்கமானவரும், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் ஒருவருமான வர்த்தகர் ஒருவர் இரண்டு லட்சம் அண்டிஜன் பரிசோதனை kits களை இறக்குமதி செய்துள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்தன. மருத்துவ சட்டத்தை மீறி இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் குறித்த Kits களை கொள்வனவு செய்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் இரண்டு விலைமனுக்களையும் வழங்கியுள்ளன. எனவே, அங்கே முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.  

#2020 வரவு செலவுத் திட்டம்
இலங்கை வரலாற்றில் வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படாத ஆண்டாக 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம் பெறுகிறது. 
வழமையாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் காரணமாக புதிதாக தெரிவாகும் தலைமைக்கு தனது கொள்கைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாமல் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் பாராளுமன்றத்தைக் களைத்து புதிய பாராளுமன்றம் அமையும் வரையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதை தள்ளிப் போட்டார். 
மார்ச் மாதம் கொரோனா பரவியதைத் தொடர்ந்து தேர்தல் பிற்போடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தின் பின்னர் அரச செலவுகளை மேற்கொள்ளல் தொடர்பில் வாத விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அரசு செலவுகளை மேற்கொண்டதுடன், அதற்கான கணக்குகள் புதிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். 
புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னரும் அரசு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக குறைநிரப்பு பிரேரணைகள், இடைக்கால நிதி அறிக்கைகள் மூலம் கணக்குகளை சரி செய்து கொண்டது. 
 அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு இடைக்கால நிதி அறிக்கையையும், குறைநிரப்பு பிரேரனையையும் பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 
பொதுவாக நிதி, பொருளாதார விவகாரங்களில் கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் குறிப்பிட்டு செல்லத்தக்கதாக உள்ளது. இவ்வாண்டு அரசு மேற்கொள்ளும் சில செலவுகளை கடந்தாண்டு செலவாக அதாவது 2019 கடன்களுக்காக என்று பெருமளவு நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் அது அரச கணக்கீட்டு நியமங்களுக்கு ஏற்ப பிழையானது என்று நிதி தொடர்பான செயற்குழுவில் தாம் நிதியமைச்சின் செயலாளரிடம் சுட்டிக் காட்டிய போது அவர் அதை ஏற்றுக கொள்ள மறுத்து, ஏதேனும் சிக்கல் இருப்பின் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனையைப் பெற்று திருத்தலாம் என்று கூறியதாகவும், தான் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தில் வினவிய போது அது முற்றிலும் பிழையான முறை என சொல்லப்பட்டதாகவும் மிகப் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். 

#மக்கள் குறை கேட்க எதிர்க்கட்சி வகுத்த வியூகம்
எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கோவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் குறைகளை முன்வைப்பதற்கான பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யப் போவதாக குறிப்பிட்டார். "பெறுமதியான வேலை. முறையாக செய்யுங்கள்" என சஜித் அனுமதி வழங்கினார். 
மநூஷ, மரிக்கார், நளின் உட்பட சில உறுப்பினர்கள் இதில் இணைந்து கொண்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்தனர். அவற்றிற்கு அழைப்புக்கள் தொடராக வர ஆரம்பித்தன. அழைப்புக்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சஜித் ஆலோசனை வழங்கினார். 

 #கோவிட் தாக்கம்
கொவிட் 19 இன் தாக்கம் காரணமாக இலங்கை சனத்தொகையில் 64% ஆனோரின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார கூறினார். அத்துடன் 7% க்கு பூரண வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 
உண்மையில் வீதிகளை அண்டி சிறு வியாபாரங்கள் செய்து வந்தோர் பலரின் வருமானம் இல்லாமல் போயுள்ளது. சுற்றுலாத்துறையில் இருந்த பலர் வீதிக்கு வந்து விட்டனர் என்றும் அங்கே பேசப்பட்டது. இடையில் குறுக்கிட்ட மனுஷ "600 பில்லியனுக்கு மேற்பட்ட தொகைக்கு நகைகள் அடகு வைகலப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். 

 #கட்சிப் பணியில் சஜித்
களுத்துறை நகர பிதா உட்பட 11 உறுப்பினர்கள் கடந்த வாரம் சஜித் ஐ சந்தித்தனர். ஒன்றாக இணைந்து செயற்பட அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். 
இந்த சந்திப்பில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித, குமார வெல்கம ஆகியோருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேராவும் கலந்து கொண்டார். 
அதே வேளை சஜித் கடந்த வாரம் கட்சி அரசியல் தொடர்பில் மிக முக்கிய நபர் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். மிக நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றதுடன் இணைந்த அரசியல் பயணம் ஒன்றிற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். குறித்த நபர் ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் மேலதிக சொலிஸிடர் ஜெனரல் ஸ்ரீ நாத் பெரேரா ஆவார். இந்த சந்திப்பில் SJB செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்து கொண்டார். 

 # ஐதேக பிரதித் தலைவருக்கு முன்னாள் நீதியரசர் வழங்கிய ஆலோசனை
கடந்த வாரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ஐதேக பிரதித் தலைவர் கேகாலையில் நடந்த சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். முன்னாள் பா.உ சந்தித் சமரசிங்ஹ வீட்டில் நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றது. முன்னாள் பா.உ க்களான ஆஷு மாரசிங்ஹ, கஸ்தூரி அனுராத ஆகியோரும் இதில் பங்குபற்றினர். 
 அதன் பின்னர் ருவன் கொழும்பு வாலுகாராம விகாரையில் நடந்த கடின உற்சவத்தில் பங்கு பற்றினார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி கோட்டை நாக விகாரையில் தொடராக 7 நாட்கள் ரதன சூத்ர ஓதும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். அங்கே முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா வை சந்தித்தார். "எப்படி ருவன். உங்களுக்கு பாரிய சவால் உள்ளது" என்று சரத் ஆரம்பித்தார். 
 "டி எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க ஆகியோர் தொடங்கிய புள்ளியில் இருந்து நான் கட்சியை மீள ஆரம்பிக்கப் போகிறேன்" என ருவன் பதில் அளித்தார். 
"ருவன் க்கு அது ஒரு சிக்கல் அல்ல. விஜேவர்த்தனவின் பக்கத்தில் என்றால் அதுவும் முடியும். இல்லையென்றால் சேனாநாயக்க பக்கம் என்றால் அதுவும் முடியும்" என்று சரத் என் சில்வா குறிப்பிட்டார். 
இலங்கையின் பழம் பெரும் அரசியல் குடும்பமான விஜேவர்த்தன குடும்பத்தின் வாரிசு ருவன் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் வழி சேனாநாயக்க தொடர்பும் உள்ளது. 
 இவை கடந்த வார நிகழ்வுகளே. அடுத்த வாரம் வரவு செலவுத் திட்டம் சூடு பிடிக்கலாம். முஸ்லீம் ஜனாஸா விவகாரம் தொடர்ந்து புகை கக்கும் எரிமலையாக வைத்துக் கொள்ளப்படலாம். அத்துடன் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவி தொடர்பில் சர்ச்சை ஒன்று உருவாகலாம்.
-  fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன?

November 12, 2020

கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குதல் தொடர்பான கதைகள் கடந்த வாரத்தில் இருந்து சமூகத்தில் அடிபட ஆரம்பித்தன. 
பாராளுமன்றத்தில் சஜித் ஆற்றிய உரையில் அது குறித்து குறிப்பிட்டதும், அமைச்சர் பவித்ரா அது குறித்து மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டமையை ஏற்றுக்கொண்டமையும் முஸ்லீம் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
அவ்வாறே 20 ஆம் சீர்திருத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளித்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நாம் ஆதரவு வழங்கியதன் நன்மையை சமூகம் கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளும் என்று எரிப்பு தடை நீக்கத்தையே குறிப்பிட்டதாக அவர்தம் ஆதரவாளர்கள் அடித்து விட ஆரம்பித்தனர். அப்படி என்றால் ஜனாசா விவகாரத்துக்கு மாத்திரம் 20 ன் பக்கம் சாய்ந்திருப்பார்களா?  அப்ப தலைவர்கள் இருவரும் இதற்கு எதிர்ப்பா? என்று பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைய முஸ்லீம் சமூகம் மீண்டும் ஏமாற்றப்பட்டது. 
இச்சந்தர்ப்பத்தில் குறித்த ஒரே நேரத்தில் அனைவரும் துஆ இஸ்திஹ்பார் செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே இரு அமைப்புக்கள் கொழும்பில் குறித்த தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தன. மீண்டும் விழித்துக் கொண்ட எமது அறைவேற்காட்டு வாட்சப், பேஸ்புக் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவரவர் சிற்றறிவை பிரயோகித்து அதன் சாதக பாதகங்களை எழுதித் தள்ளினர். தடை நீக்கப்படும் சாத்தியம் உள்ளமையையும், அவ்வாறு நீக்கப்பட்டால் ஏற்படும் எதிர் வினைகளையும் நன்றாக விளங்கிக் கொண்ட பலர் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூகம் என்ற அடிப்படையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றனர். 
இந்நிலையில் யாருமே எதிர்பாராத தருணத்தில் ஜம்இய்யதுல் உலமா தலைவரின் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி முஸ்லீம் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது. கடந்த திங்கள் (9) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாஸா அடக்கம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், மன்னார் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடம் ஒன்றில் அடக்கம் செய்யுமாறு சொல்லப்பட்டதாகவும் அந்த தகவல் சொன்னது. 
அதன் பின்னர் மேலே சொன்ன சமூக ஆர்வலக் குஞ்சுகளுக்கு, ஸ்மார்ட் போன் ஊடக பருப்புகளாலும் பொறுப்பற்ற விதமாக நன்றி தெரிவிக்கவும், வெற்றிக் கொண்டாட்ட பதிவுகளையும் இட்டு வேலையை ஆரம்பித்தனர். 
இனவாத செயற்பாட்டாளர்கள் தம் பங்கிற்கு மறுபுறம் ஆரம்பித்தனர். சுகாதார தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி எவ்வாறு தனித் தீர்மானம் எடுப்பார்? IDH வைத்தியசாலைக்கு மிக அண்மையிலுள்ள தகனசாலையில் எரிக்கும்போது கொழும்பிலிருந்து மன்னாருக்கு எப்படி அவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம்? அது பாதிப்பை ஏற்படுத்தாதா? தேர்தலுக்கு முன் முடியாது என்றால் தற்போது மாத்திரம் எவ்வாறு முடியும் ? அன்று கிருமி பரவும் என்றால் இன்று கிருமி பரவாதா? போன்ற பல்வேறு கோணங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
உடனே சுதாகரித்துக் கொண்ட அரசு சார்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்னொரு புறம் அமைச்சர் அலி சப்ரி தான் அவ்வாறான தகவலை ரிஸ்வி முப்திக்கு சொல்லவில்லை என்று கூறிய தகவல்களும் வெளியாகின. இவ்விடயம் குழம்பிப்போன பின்னர் அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் இருந்ததாகவும் தகவல். 
எனவே இந்த விவகாரம் இன்னும் நீண்டு கொண்டு செல்லலாம். 
இங்கே அமைச்சர் அலி சப்ரி உண்மையில் அவ்வாறான செய்தி ஒன்றை ரிஸ்வி முப்தியிடம் சொன்னாரா? அவ்வாறு சொல்லியிருப்பின் அது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மறந்த செயலாகும். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லி இருப்பின் அதனை பகிரங்கப்படுத்தியமையும் தவறாகும். ஆ
ஆனால் அலிசப்ரி சொல்லாத ஒரு விடயத்தை தானாக நினைத்து ரிஸ்வி முப்தி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. இங்கு அலிசப்ரி கூட்டுப்பொறுப்பை மீறினார். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லப்பட்ட ஒரு விடயத்தை உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் பகிரங்கப் படுத்தினார் ரிஸ்வி முப்தி என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இரு பக்கமும் தவறு என்றே தோன்றுகிறது. 
இது மாத்திரமன்றி எமது அரசியல்வாதிகளின் அல்லக்கைகளும், ஊடக பருப்புக்களும் கொஞ்சம் கூட அறிவு இன்றி செயற்பட்டமை அதை விட பிழையாகும். ஏனென்றால் உரிய வர்த்தமானி வெளியிடப்படும் வரை இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு எந்தளவு பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதற்க்கு இது சிறந்த உதாரணம். 
அல்லாஹ்வின் நாட்டம் இருப்பின் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கலாம். ஆனால் அது வரை எத்தனை ஜனாஸாக்களை எரித்து விடுவார்களோ... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 ஒருவேளை நாளையோ, இன்னும் ஓரிரு தினங்களிலோ அனுமதி கிடைத்தாலும் அடக்கம் செய்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே தவிர வெட்டி பீற்றல் மூலம் சமூகம் அடைய போகும் நன்மைகள் எதுவும் இல்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப் பெரிய பாடமாக உள்ளது. 
அவசரத்தின் விளைவுகளை அறிந்து  நிதானமாக செயற்படுவோமாக! 
குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை...

November 12, 2020

#நாட்டை ஸ்தம்பிக்க செய்த கொரோனா
கடந்த வாரம் இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார பேசு பொருள் கொரோனா.
வார அடிப்படையில் நோக்கின் மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்ட வாரம் இதுவாகும். தினமும் 200, 300 என்று நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணம் முழுவதற்கும் போடப்பட்ட ஊரடங்கு கடந்த திங்கள்தான் நீக்கப்பட்டது.
இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விநியோக மையம் கொழும்பு. அங்கே ஊரடங்கு என்பதால் அதன் பிரதிபலிப்புகள் நாடு பூராகவும் அவதானிக்கத் தக்கதாக இருந்தது. 

#வேலையில் இறங்கினார் பசில்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ. மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டிய பொருளாதார உதவிகள் குறித்து ஆராய்வதற்காக பசில் தலைமையில் அலரி மாளிகையில் ஒன்று கூடியது. 
பவித்ரா, பந்துல, பிரசன்ன ரணதுங்க, ரோஹித, காமினி லோகுகே போன்ற அமைச்சர்களும், மேல் மாகாணத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அதில் கலந்து கொண்டனர். 
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா வழங்குதல் போன்ற அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டது. 
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவு அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசப்பட்டது. 
 கட்டுநாயக்க உட்பட சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் செய்யும் விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் பற்றிய விடயத்தை ஆரம்பித்தார் அமைச்சர் பிரசன்ன. "அவர்களுக்கு சாப்பிடக் கூட எதுவும் இல்லையென்று பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது" என அவர் தெரிவித்தார். விடுதிகளில் உள்ளவர்களில் பலர் Man Power தொழிலாளர்கள். அவர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

#கேபினட் கூட்டம்
02/11/2020 கேபினட் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 
வழமையாக கூட்ட மேசையை சூழ ஒரு வரிசையாக அமரும் அமைச்சர்கள் அன்றைய தினம்  மீட்டர் இடைவெளி பேணியமை காரணமாக இரு வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர். 
அந்த கேபினட் கூட்டத்தின் பிரதான பேசு பொருளாக இருந்தது கோவிட்19 பிரச்சினை. "நிறைய பேர் சொல்வது போல லொக் டவுன் செய்து பிரச்சனை தீரப்போவதில்லை. அவ்வாறு மூடினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். பாடசாலைகளை மூடினால் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதனால் எமக்கு இப்போது இருக்கும் தெரிவு இதனுடன் வாழ்வது. நோயினால் பீடிக்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், ஏனையவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அதனாலாகும்" என ஜனாதிபதி நீண்ட விளக்கம் வழங்கினார். 

#போலீசுக்கு வாகனம் கேட்ட சமல்
போலீஸ்க்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச. போலீஸ்க்கு போதுமான வாகனங்கள் இல்லாமையினால் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கேபினட் இல் சொன்னது மாற்று ஏற்பாடு தொடர்பிலும் விளக்கியாகும். 
அமைச்சரின் கையில் அரசுடைமையாக்கப்பட்ட, சுங்கத்தின் கைவசம் உள்ள வாகனங்களின் பட்டியல் ஒன்றை கேபினட் இல் முன் வைத்த அமைச்சர் சமல் அவற்றை போலீஸ் திணைக்களத்திற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். 

#டிவியில் நேரம் கேட்ட பீரிஸ்
கொரோனா காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை நிவர்த்தி செய்வதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முன்வைத்தார். 
தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடசாலை பாடங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அது உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 

#அரிசி மாபியாவிற்கு எதிராக பந்துல
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அரிசி விலைகள் அதிகரித்துள்ளன. அரிசி உற்பத்தியாளர்கள்/அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு அரிசி கிடைப்பதால் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
அமைச்சர் பந்துல சில முறை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சந்தித்து விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 
இதனால் அமைச்சர் பந்துல நுகர்வோர் அதிகார சபை ஊடாக அரிசிக்கான உச்ச சில்லறை விலையை நிர்ணயித்தார். என்ற போதிலும் விலை குறைவதாக இல்லை. அரிசி விலை நாட்டில் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது. அதே போன்று சீனிக்கான வரி குறைக்கப்பட்டு ஒரு மாதம் அளவு கடந்து விட்டது. ஆனால் குறைந்த விலையில் சீனி நாட்டில் இல்லை. சதோச இல் கூட மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடக்கிறது. அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத் தலைவர் அது தொடர்பில் அரசு மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். அவற்றில் முக்கியமானது நாட்டில் தேவையான சீனி கையிருப்பில் இருக்கும் போது துறைமுகத்தை அண்டியிருந்த அரசுக்கு ஆதரவளிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சீனியை வரியின்றி நாட்டுக்குள் கொண்டு வர அரசு செய்த சதியே இதுவென அவர் தெரிவித்தார். 
சீனிக்கான விலையை குறைக்கும் நோக்கில் வரிக் குறைப்பு செய்ததாகவும், அதன் நன்மை பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்றும் இந்நிலை தொடருமாக இருப்பின் வரியை மீண்டும் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமைச்சர் பந்துல ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
ஏற்கனவே இவ்வரசு வந்த பின்னர் அரிசி உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்த போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை 

##வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு குறுக்கே வந்த கொரோனா
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ளது. 
வழமையாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதற்கான விவாதங்கள் சுமார் ஒரு மாதம் நீடிக்கும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்தல் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் 4 நாட்களும், குழுநிலை விவாதம் 6 நாட்களும் நடைபெறும் என் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

#சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சந்தித்த சீன கமியூனிஸ்ட் கட்சி
சிறிலங்கா பொது ஜன பெரமுனவிற்கும் சீன கமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. 
சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பில் அதன் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் சேமசிங்ஹ ஆகிய அமைச்சர்களும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவும் கலந்து கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா நிலைமை காரணமாக எவரும் இங்கு வரவில்லை. சீனாவில் இருந்து நிகழ்நிலை (Online) சந்திப்பாக இது நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் இதில் பங்குபற்றுவதாக இருந்த போதிலும் அவர் புதிதாக நியமனம் பெற்று இலங்கை வந்து தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக பங்குபற்றவில்லை. 
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்ஷ இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, சீனாவின் கமியூனிஸ்ட் கட்சி பாணியில் தமது கட்சியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த பின்னணியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

#தம்புள்ளையில் தேங்கிய மரக்கறிகள்#  
இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார மத்திய நிலையம் தம்புள்ளை. பல விவசாயிகள் மட்டுமன்றி ஏனைய பிராந்திய பொருளாதார மத்திய நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மரக்கறி, பழ வகைகள் நாடுபூராக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தம்புள்ளையில் உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவானது. 
உடனடியாக ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பா.உ பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சிக்கல்களை கேட்டறிந்தனர். அறுவடைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்ந்த அவர்கள் அவசரமாக செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவோடு தொடர்பு கொண்டு விடயத்தை எத்தி வைத்தார். 
பசில் உடனடியாக செயல்பட்டு மேல் மாகாணத்தில் உள்ள எல்லா பொருளாதார மத்திய நிலையங்களையும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையிலும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் காரணமாக தம்புள்ளை நிலைமைகள் பெரும்பாலும் சீரடைந்தன. 

#குருணாகளில் இருந்து பிரதமருக்கு முறைப்பாடு
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குருநாகல் மாவட்டமும் ஒன்றாகும். எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 10 பரிசோதனைகளையாவது செய்ய முடியாதுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்த பா.உ சாந்த பண்டார முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். 
 "Sir, குருநாகல் வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தின் கொள்ளளவு போதாது. ஏற்கனவே குருநாகல் மாவட்டத்தில் பல போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. எனவே, 5000 ரூபாய் நிவாரணம் குருநாகல் மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். பதிலளித்த பிரதமர் "இது தொடர்பில் பசிலுடன் கதைக்க வேண்டும். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்." என்று கூறினார். 

#மீண்டும் அபயாராமவில் மஹிந்த# பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் குமாரசிரி ஹெட்டிக்கே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தப்பனத்தின் தலைவர் சுமித் விஜேவிங்க ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி நரஹேன்பிடவில் உள்ள அபயாராம விகாரைக்கு சென்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தனர். 
அப்போது வேறு அலுவல் விடயமாக சென்று வரும் வழியில் பிரதமரும் அங்கே வந்து சேர்ந்தார். 
 தேரரை விழித்த பிரதமர் "வேறு அலுவலாக இந்தப் பக்கமாக வந்தேன். தங்களை தரிசித்து செல்ல எண்ணி இங்கே வந்தேன்" என்று கூற "நீங்கள் ஒரு போதும் மாறாத தலைவர். அதனால்தான் நாங்கள் இன்னும் உங்களை கவனிக்கிறோம்" என மிக பரிவுடன் கூறினார். 
"Sir தலைமை பிக்கு இப்போதெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராகவும் கொஞ்சம் காரமாக பேசுகிறார். அதனால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்" என குமாரசிரி ஹெட்டிக்கே கூறினார். 
 "ஆனந்த தேரரின் குணம் அப்படித்தான். குறைபாடுகள் உள்ள இடத்தில் பேசுவார். நாங்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை. உங்களுக்கு வேண்டியது வேகமாக வேலைகள் நடக்க. அப்படித்தானே! " என பிரதமர் கூற, "பிரதமர் அவர்களே! எதற்கும் சுற்றுப்புறம் குறித்து அவதானமாக இருங்கள். சில அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் செய்யும் வேலை அவ்வளவு நல்லதல்ல. அரசின் மீது மக்கள் வெறுப்படைய அவையும் ஒரு காரணம்" என தேரர் குறிப்பிட்டார். 

#அனுராதபுரத்தில் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பல விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அந்த விஜயத்தின் போது விகாரைகளின் குறைபாடுகள் தொடர்பில் தேடிப் பார்க்கவும் அவர் தவறவில்லை. 
இசுருமுனிய விகாரைக்கு சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். "Sir நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி விடயங்கள் உண்மையாகிக் கொண்டே வருகின்றன. பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பெற்றுக்கொண்டாலும் இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறியதுடன் கடந்த தேர்தல்களில் தான் மொட்டுவின் வெற்றிக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார். 
"அரசு நினைக்குமானால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று அது நடக்கப் போவதில்லை. எந்த ஆட்சிக்கும் ஏற்பட்ட தவறு மக்கள் பிரச்சினைகளை மறந்தமையே" என சஜித் பதிலளித்தார். 
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஜித் "அரசு முன்னுரிமை அளிப்பது தேவையான விடயங்களுக்கு அல்ல. தேவையற்ற விடயங்களுக்கு. 20 கொண்டு வர இருந்த அவசரம் வெள்ளையர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக புதிய ஒன்றைக் கொண்டு வருவதில் இல்லை" எனவும் தெரிவித்தார். 
 தொடர்ந்து மிரிசவெடிய விகாரைக்கும் சென்றார். அங்கே இருந்த ரோஹன பண்டார சஜித் இடம் "Sir அரசு கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளது" என்று ஒரு வீடியோவை கட்டினார் அதில் சுகாதார அமைச்சர் பவித்ரா, இன்னும் சில அமைச்சர்கள் குடங்களை ஆற்றில் வீசும் காட்சி இருந்தது. "இவ்வாறுதான் இந்த அரசாங்கம் கோரோணாவை ஒளிக்கப் போகிறது" எனக் கூற "ஒவ்வொருவரினதும் நம்பிக்கையை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. ஜனாதிபதி தேர்தலின் போது பாம்பு ஒன்றை வைத்து ஆட்டம் போட்டவர்கள் இவர்கள்" எனக் கூறினார். 

 #சஜித் இன் பாராளுமன்ற உரைக்கு கிடைத்த பாராட்டு
 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சுமார் ஒரு மணி நேர உரையொன்றை ஆற்றியிருந்தார். சுகாதரத்துறை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள சமூக சிக்கல்கள் குறித்தும் அந்த உரையில் கருத்து தெரிவித்த அவர், தான் நல்ல நோக்கில் சொன்ன பல ஆலோசனைகளை அரசு தட்டிக் கழித்ததுடன், தன்னை எள்ளி நகையாடி, தனக்கு சேறு பூசிக்கொண்டு இருந்ததையும் நினைவுபடுத்தினார். இந்த உரையிலேயே முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் குறித்தும் அரசை காரசாரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார். கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த உரையை பாராட்டியிருந்தனர். 

 #ருவன் விஜேவர்த்தனவின் கட்சிப் பணி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை காரணமாக அவரால் கொழும்பை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனினும், Zoom தொழில் நுட்பத்தை ஊடாக பல முக்கியஸ்தர்களோடு தனியாகவும், கூட்டாகவும் கலந்துரையாடல்களை நடத்தினார். கடந்த போயா தினத்தை முன்னிட்டு கட்சித் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் தர்ம உபதேசம் ஒன்றையும் ருவன் ஏற்பாடு செய்திருந்தார். 
அதன் பின்னர் அங்கே சேர்ந்திருந்தவர்களோடு பேசிய ருவன் "கட்சியை மீள கட்டியெழுப்ப மக்களிடையே செல்ல வேண்டும். அவ்வாறெல்லாமல் மக்களில் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியாது" என்று தெரிவித்தார். 
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று ஒன்லைன் மூலம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்தினார். 
இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. அடுத்த வாரம் ஜனாஸா எரிப்பு, Rapid Test தொடர்பான வாத விவாதங்கள் அரசியல் களத்தில் மேலோங்கலாம். அவை பற்றிய சுவையான உள்ளக தகவல்களோடு அடுத்த வாரம் மீண்டும் வரும். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5
Powered by Blogger.