தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர்
irumbuthirai
August 08, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியலில் இருந்து கடந்த மாத ஆரம்பத்திலேயே தான் விலகிக் கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எனது இந்த முடிவை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன். 
கிரிக்கெட் விளையாட்டில் அதிக காலத்தை செலவழித்த நான் இதன் பிறகு எனது குடும்பத்துக்காக காலத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது பிரச்சாரத்தை கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்காக சிறந்தமுறையில் செய்தேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டை சிறந்த முறையில் வழிநடத்துவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட 17 பேர்கள் அடங்கிய தேசிய பட்டியல் உறுப்பினர்களில்  திலக்கரட்ன டில்ஷானின் பெயர் அடங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர் 
 Reviewed by irumbuthirai
        on 
        
August 08, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
August 08, 2020
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
August 08, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
August 08, 2020
 
        Rating: 
 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
