உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
Irumbu Thirai News
September 15, 2021
இம்முறை நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக இதுவரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.
அந்தவகையில் உயர்தர பரீட்சைக்காக 2,922 விண்ணப்பங்களும்
புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,589 விண்ணப்பங்களும் மாத்திரமே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர் ஊடாகவே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஆனால் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பதனால் விண்ணப்பிக்கவில்லை.
அதன் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
Reviewed by Irumbu Thirai News
on
September 15, 2021
Rating:
