வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

October 05, 2019

கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 

16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கிராம உத்தியோகத்தர் சேவையை தனியொரு சேவையாக அறிவிக்குமாறும், தமக்கு 5000 ரூபா சலுகை கொடுப்பனவை பெற்றுத் தருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிப்பதாக தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை 

சமர்பிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த மாதம் 9 ஆம் மற்றும் 10 திகதிளில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் எல்பிட்டிய பிரதேச தேர்தல் நடைபெறுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் தமது போராட்டத்தை முன்னேடுக்க போவதாக அந்த தொழிற்;சங்கத்தின் தலைவர் கே.டி.சுமித் கொடிகார கூறியுள்ளார்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு

October 05, 2019

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதில் தமது பிள்ளைகளை சித்தியடைய வைக்க பெற்றார் படும் கஷ்டங்கள் தியாகம் எண்ணிலடங்கா. அந்தவகையில் இம்முறை இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறுக்காக 

ஆவலோடு பலரும் காத்திருப்பர். இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 05, 2019

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடங்கள், 
விவசாய திணைக்கள தர கற்கை நெறி உட்பட பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர்

October 03, 2019


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்களை வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சார பதாதைகளையும் பெனர்களையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டோம். அவை அகற்றப்படா விட்டால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவற்றை அகற்றுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(அ.த.தி)

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி

October 03, 2019


அண்மையில் கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்று முதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வில் 

கல்வி அமைச்சரும் சட்டத்தரணியுமான அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது. இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய 

விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தொரிவித்தார்.
(அ.த.தி)
அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம்

October 03, 2019


பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகிதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையமானது தற்போது 

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும். கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 

5 ஆக அதிகரித்துள்ளது. இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.
(அ.த.தி)
பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages

October 02, 2019


Examination Department
past paper
G.C.E. (A/L)
Electrical , Eletronic and Information Technology (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை

October 02, 2019


ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் 

என்ஜின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலையப் பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாமாகவே சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடராக இடம்பெறுகிறது. 
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நியமிக்கப்பட்ட உப குழுவின் சிபார்சையும் ஏற்றுக்கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

Railway made a ‘closed service’

October 02, 2019


A senior Minister said that the decision to make the railway service a closed service was taken after taking into consideration the discussions held with railway trade unions by the Cabinet sub committee appointed last week to look into the salary anomalies in the public sector and submit a report. The Railway service is to be made a


 ‘closed service’ as distinct from the rest of the public service, according to a Cabinet decision taken yesterday. A Cabinet memorandum to make the Railway service a ‘closed service’ was approved by the Cabinet of ministers at its meeting held yesterday.Accordingly steps would be taken in the future to remedy salary anomalies in various grades in the Railway service separately from the rest of the public service. A ‘closed service’ will result in the Railways personnel becoming a separate cadre distinct from the rest of the public service. This will also mean that this cadre cannot then transfer to other parts of the public service, government sources explained. However, Sri Lanka Railway trade union representatives said


that the strike will continue, even though the service is to be made a closed service. “We have not received viable solutions to our issues”, he said.
(GID)
Railway made a ‘closed service’ Railway made a ‘closed service’ Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு)

October 02, 2019


பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து முழு விபரங்களைப் பார்வையிடுக.


Exams in October 2019
பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 02, 2019


01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள். இதில்,


காணியற்றவர்களுக்கு வீடு வழங்கல்,
சிறுநீரக நோயாளிகளின் இரத்த சுத்திகரிப்பை மேம்படுத்தல்,


புதிய பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவை நிறுவுதல் ,
2020ற்கு இடைக்கால கணக்கறிக்கை,
ஆசிரிய சேவை மற்றும் ரயில் சேவை என்பவற்றை


Closed Service யாக மாற்றல் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம்.
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Cabinet decisions
01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

நாளை மறுதினம் அரச விடுமுறையா?

October 02, 2019


நாளை மறுதினம் அரச விடுமுறையா என்பது தொடர்பில் வெளியான ஊடக அறிக்கை இதோ.. 

ஊடக அறிக்கை 
 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார். 
 நாலக்க கலுவேவ 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
(அ.த.தி)
நாளை மறுதினம் அரச விடுமுறையா? நாளை மறுதினம் அரச விடுமுறையா? Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages)

October 01, 2019

Examination Department
Past paper
Mechanical Technology (1 & 11)
English, Tamil & Sinhala languages
Click the link below for English medium paper


English medium
Click the link below for Tamil medium paper


Tamil medium
Click the link below for Sinhala medium paper


Sinhala medium
Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages) Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages) Reviewed by irumbuthirai on October 01, 2019 Rating: 5
Powered by Blogger.