சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

August 10, 2021

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் நேற்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள். இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள். 
தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். 
 செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு  சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 10, 2021 Rating: 5

தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்!

August 09, 2021

தமது நிரந்தர சேவை நிலையத்திலிருந்து தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விசாரா ஊழியர்களின் தற்காலிக இடமாற்றத்திற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

தேசிய பாடசாலை, கல்வியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொடர்பாகவே இந்த அறிவிப்பை இன்று(9) கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

தற்போது அவர்கள் தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்ற இடத்திலேயே 
தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டும். அவர்கள் நிரந்தரமாக சேவையாற்றும் இடம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டதும் அங்கு செல்ல வேண்டும். 

அவர்களின் தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தாலும் நிரந்தர சேவை இடம் வழமை நிலைமைக்கு திரும்பும் வரை தற்காலிக இடமாற்றம் பெற்ற இடத்திலேயே சேவையாற்ற வேண்டும்.
தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்! தற்காலிக இடமாற்றம் பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு:

August 09, 2021

அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 05 அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

இந்த குழுவில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு: அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு: Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்!

August 09, 2021

தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு செல்வது நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஓய்வூதியத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 

மேலும் ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்! ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

பிற்போடப்பட்ட பரீட்சைகள்: பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு:

August 09, 2021

பரீட்சைத் திணைக்களத்தினால் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட இருந்த சகல நிறுவனம்சார் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தற்போதைய Covid நிலைமை காரணமாகவே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்போடப்பட்ட பரீட்சைகள்: பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு: பிற்போடப்பட்ட பரீட்சைகள்: பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

UNIVOTEC Degree Courses / யுனிவொடெக் இல் பட்டக் கற்கை நெறிகள்

August 08, 2021

The UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY Call for Applications for Degree Programmes 
Admissions to Academic Year 2021 Holders of NVQ (SL) 5/6 or equivalent qualification are eligible to apply.Those who seek admission to weekday programmes with G.C.E (A/L) qualifications, only 2020 exam results will be considered. 

NVQ (SL) 5/6 அல்லது அதற்கு சமமான தலைமைகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2020 இல் உ.தர பரீட்சைக்கு தோற்றியவர்கள் வார நாட்களில் இடம்பெறும் கற்கை நெறிகளுக்கு மாத்திரம் கருத்தில் கொள்ளப்படுவர்.  

Closing date: 31-08-2021. 

Application & More details on: 

Contact no: 011-2630700.



UNIVOTEC Degree Courses / யுனிவொடெக் இல் பட்டக் கற்கை நெறிகள் UNIVOTEC Degree Courses / யுனிவொடெக் இல் பட்டக் கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on August 08, 2021 Rating: 5

பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் (விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) / Recruitment of Graduates to Translation -2021

August 08, 2021

பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் 

மொழிபெயர்ப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் காணப்பட்ட போதும் உரிய தகைமைகளை உடையோர் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு மொழிபெயர்ப்பிற்கான தொழில்சார் தகைமையை (DOL Professional Qualification in Translation) ஏற்படுத்துவதற்காக, மொழிபெயர்ப்பு குறித்த ஒருவருட கால முழுநேர தொழில்சார் கற்கைநெறியொன்று அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பின்வரும் 03 மொழி வகைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும்: 
1. சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை 
2. தமிழ் - ஆங்கிலம் மொழி வகை 
3. சிங்களம் - தமிழ் மொழி வகை 

ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்/ நிபந்தனைகள்:
1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும். 
2. சிறந்த நடத்தையுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும். 
3.இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கு இணங்குதல் வேண்டும். 
4. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்கு குறைவானவராகவும் இருத்தல் வேண்டும். 
5. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியில் கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். கல்வித் தகைமைகள் 

(i). சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் 

(ii). தமிழ் - ஆங்கிலம் மொழி வகை 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் 

(iii). சிங்களம் - தமிழ் மொழி வகை 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

மற்றும் 
க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (தாய்மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

மற்றும் 

க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் 

அல்லது 

சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) அல்லது மொழிபெயர்ப்பு (சிங்களம்/தமிழ் மொழி பிரிவின் கீழ்) டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும். 

நேர்முகப் பரீட்சை:  
நேர்முகப்பரீட்சைக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. இப்பரீட்சை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் தகைமைகளை பரிசீலிப்பதற்கு மட்டுமே நடாத்தப்படும். 

பரீட்சை: 
2021, செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 
2021 - 08 - 20.

மேலதிக விபரங்களிற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் (விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) / Recruitment of Graduates to Translation -2021 பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் (விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) / Recruitment of Graduates to Translation -2021 Reviewed by irumbuthirai on August 08, 2021 Rating: 5

Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021

August 08, 2021

அக்டோபர் 1 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்தப் போட்டி தொடர்பான விபரங்கள்: 

கருப்பொருள்: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் (Let's Eliminate Child Labour) 

நேரம்: கூடியது 05 நிமிடங்கள். 

மொழி மூலம்: தமிழ் / சிங்களம் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) 

தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது. 
முதலாம் பரிசு: 50,000/- 
இரண்டாம் பரிசு: 40,000/- 
மூன்றாம் பரிசு: 30,000/- 
10 திறமை பரிசுகள்: தலா 10,000/- 

குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட சகல ஆக்கங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதித் தினம்: 17-09-2021. 

பதிவு செய்ய வேண்டிய இறுதித் தினம்: 20-08-2021. 

பதிவு செய்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆக்கங்களை சமர்ப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021 Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021 Reviewed by irumbuthirai on August 08, 2021 Rating: 5

பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை!

August 07, 2021

அரச ஊழியர்களை வாரத்திற்கு 03 நாட்கள் சேவைக்கு அழைக்குமாறு பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சால் நேற்றைய தினம் (6) சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் நேற்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
அதில், 

சகல மாகாண, வலய,கோட்ட கோட்ட கல்வி சார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கிழமைக்கு குறைந்தது மூன்று நாட்கள் பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் , 

பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் பொருத்தமான முறையில் பகுதி பகுதியாக அழைக்கப்பட வேண்டும் என்றும்,
கல்விசார் ஊழியர்கள் பாடசாலைக்கு வரத் தேவையில்லை என்றும்,

ஆனால் அவசியம் கருதி அதிபர் கல்விசார் ஊழியர்கள் சிலரை அழைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் வீட்டிலிருந்து Online முறை மூலமோ வேறு பொருத்தமான முறை மூலமோ மாணவர்களுக்கு கற்பிப்பதை எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் அதில் தெரிவித்துள்ளார் 

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.


பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை! பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை! Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி)

August 07, 2021

Apllications are called for B. Sc Honours in Nursing External Degree from Eastern University of Sri Lanka. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படும் விஞ்ஞான கௌரவ / சிறப்புமாணி வெளிவாரிப்பட்ட கற்கை நெறிக்கு பதிவு செய்வதற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

Duration: 02 years (Weekends) 

Applicatin fee: 1000/- 

குறிப்பு:- விண்ணப்பம் Online முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (Desktop / Laptop Only. Not allowed Mobile) 

இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி) External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி) Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல்

August 07, 2021

கரப்பந்து (Volleyball) மற்றும் வலைப்பந்து (Netball) என்பவற்றுக்கு தேசிய ரீதியில் வீர, வீராங்கனைகளை தெரிவுசெய்வதற்கான செயற்திட்டம் ஒன்றை விளையாட்டு அமைச்சும் தேசிய இளைஞர் படையணியும் சேர்ந்து ஆரம்பித்துள்ளது. 

வயதெல்லை: 24 ற்கு குறைவானவர்கள். 

ஆண்கள் உயரம்: 6 அடி அல்லது அதற்கு மேல். 

பெண்கள் உயரம்: 5.11 அடி அல்லது அதற்கு மேல். 

விபரங்களை அனுப்பும் முறை: 
உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி என்பவற்றை 0703965016 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். 

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்: 0710377377.
தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

Notice for SLIATE Students (Issue Diploma Certificate)

August 07, 2021

Applications are called from eligible students who have completed the Higher National Diploma programme by academic year 2019 to issue Diploma Certificate. Particular Students should download the application form and submit the duly filled application with bank receipt and detailed result sheet to the ATI. 

இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் 2019 கல்வி ஆண்டில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த மாணவர்கள் தமக்குரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை SLIATE நிறுவனத்திற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. 

Closing date: 03rd September 2021. 

Click the link below for Application:

Notice for SLIATE Students (Issue Diploma Certificate) Notice for SLIATE Students (Issue Diploma Certificate) Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021

August 07, 2021

Limited competitive examination for recruitment to Grade 111 of Sri Lanka Planning Service - 2021 

இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் - 111 இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள ஒன்லைன் (Online) விண்ணப்ப படிவத்தின் மூலமே சமர்ப்பிக்க முடியும். 

விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின் அதை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் எடுத்து அதில் விண்ணப்பதாரியின் ஒப்பத்தை சான்றுப்படுத்தி, நிறுவன தலைவரின் சான்றுரையுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். 

எந்தவொரு மதத்தையும் சேர்ந்த துறவிக்கு இந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது தோற்றவோ அனுமதி கிடையாது.

Online விண்ணப்பத்திற்குரிய காலம்: 07-08-2021 தொடக்கம் 06-09-2021 (24:00 மணி) வரை. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5
Powered by Blogger.