தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி



2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 

9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை 

மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும். ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது இந்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று மேலதிக ஆணையாளர் தெரிவித்தார். 
(அ.த.தி)
தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப இறுதி திகதி Reviewed by irumbuthirai on October 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.