08-07-2021 அன்று வெளியான விசேட வர்த்தமானியில் தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த வர்த்தமானியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது...
"காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17இல் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிகமாக சேர்க்கப்பட்ட "அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லை 63 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" எனும் பகுதி நீக்கப்பட்டு,
"அரசாங்க ஓய்வூதியத்திற்கு உரிமையுள்ள, பின்வரும் பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் - 63 வயது / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05.
பல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05.
தாதியர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-06-14.
என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானியை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு!
Reviewed by irumbuthirai
on
July 14, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
July 14, 2021
Rating:

No comments: