ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்:

 


ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதி நன்மைகளை அதிகரித்தல் தொடர்பாக 30-8-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு தருகிறோம்.


ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழுள்ள நன்மைகளை மேலும் அதிகரித்தல் 
 
2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தமது 70 வயது வரை தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
குறித்த தினத்திற்கு முன்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளவர்களுக்காக குறித்த நன்மைகயைப் பெற்றுக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2020 யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள பிரதிபலன்களை மேலும் அதிகரித்து ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்புடைய வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்: ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதியின் நன்மைகளை அதிகரித்தல்: Reviewed by irumbuthirai on August 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.