பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்!

 

இந்த வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்பங்களை Online முறையில் சமர்ப்பிக்கும் விடயங்களில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலையிட்டால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் பெற்றோர்கள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
குறித்த செய்தியை இன்றைய (04/09/2021) திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
 
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
இந்த பரீட்சைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதில் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த யாராவது தடைகளை ஏற்படுத்தினால் அல்லது அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில் பெற்றோர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது வலயக்கல்வி காரியாலயத்தில் அல்லது கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்யலாம். 
 
தற்போதைய நிலையிலும் அவ்வாறான சில முறைப்பாடுகள் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை நான் போலீசாருக்கு தெரியபடுத்தி உள்ளேன். அது தொடர்பான விசாரணைகள் விரைவில் இடம்பெறும். 
 
இது மாத்திரமன்றி Online முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மீள ஆரம்பிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 
 
அவ்வாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அவர்களும் முறைப்பாடு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
இது தொடர்பான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.

 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! பரீட்சைக்கு விண்ணப்பித்தல்: பெற்றோர்கள் முறைப்பாடு செய்யலாம் என்கிறார் கல்வியமைச்சர்! Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.