இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் தற்போதைய பதில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க.

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றனர்.

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது இந்த வாக்கெடுப்பு ஆரம்பமானது. 

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இதில் போட்டியிட்டனர். SJB தனது ஆதரவை டளசுக்கு வழங்கியதோடு பிரதமர் பதவியை சஜித் பெறுவதற்கான உடன்பாடும் எட்டப்பட்டிருந்தது. இதனால் சஜித் போட்டியில் இருந்து விலகினார். 

இன்றைய வாக்களிப்பில் சபாநாயகரும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற செயலாளர் அவர்கள் தேர்தலை நடத்தும் தெரிவித்தாட்சி அலுவலராக கடமையாற்றினார். 

இதே வேளை இன்றைய வாக்கெடுப்பில் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஜி ஜி பொன்னம்பலம் ஆகியோர் வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டனர். மேலும் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே 219 வாக்குகளே செல்லுபடியான வாக்குகள் ஆகும். 

பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தனது சுகவீனத்துக்கு மத்தியிலும் சேலைன் ஏற்றப்பட்ட நிலையில் வந்து வாக்களித்தமே குறிப்பிடத்தக்கது. 

1993 ரணசிங்க பிரேமதாசாவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டி பி விஜயதுங்க இவ்வாறு பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதனால் வாக்களிப்பு இடம் பெறவில்லை. 

ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மூவர் போட்டியிட்டமையினால் வாக்களிப்பு இடம்பெற்றது. எனவே இது பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்த முதல் சந்தர்ப்பமாகும். மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டது இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகும். 

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் வரை இவர் பதவியில் இருப்பார். 

எவ்வாறாயினும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களை திருப்திபடுத்தவும் வேண்டும். போராட்டக்காரர்களின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து அதன்படியும் செயல்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வேண்டும். 

எனவே ஜனாதிபதியின் இந்த எஞ்சிய பதவிக்காலம் சவால் மிக்கதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவான ஜனாதிபதி Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.