Fuel Pass தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்...


 
மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சினால் நேற்றைய தினம் (16) அறிமுகப்படுத்தப்பட்ட 'தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass)' தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடையங்களை இங்கே தருகிறோம். 

(1) எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருளுக்கான வரிசை என்பவற்றை குறைப்பதற்காகவும் சகலருக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) அறிமுகம் செய்யப்படுகிறது. 

(2) வாராந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அளவில் (Guaranteed Weekly Quota) எரிபொருள் வழங்கப்படும். 

(3) இதற்கான மென்பொருள் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்திற்கு எவ்வித செலவும் இல்லாமல் இலவசமாக செய்யப்பட்டதாகும். 

(4) ஒரு தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவு இலக்கம் என்பவற்றுக்கு ஒரு வாகனத்தை மாத்திரம் பதியலாம். (பல வாகனங்களை வைத்து இயக்கும் நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பதிவின் கீழேயே சகல வாகனங்களையும் பதியும் வகையில் மென்பொருள் இன்னும் சில நாட்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாகனத்திற்கும் வெவ்வேறான QR Code வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

(5) பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகள் மற்றும் புகையிரதங்களுக்கு இந்த முறை அமுல் ஆகாது. 

(6) Online இல் பதிவு செய்ததும் QR Code வழங்கப்படும். அதை போட்டோ வடிவிலோ (Screen shot/ Image) அல்லது அச்சுப் பிரதி (Print) முறையிலோ  வைத்துக் கொள்ளலாம். 

(7) உங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் தயாரானதும் உங்களுக்கு அறிய தரப்படும். 

(8) அப்போது இந்த QR Code ஐ எரிபொருள் நிலையத்திற்கு காட்டி எரிபொருளை பெறலாம். 

(9) எரிபொருளை பெற்றதும் அது தொடர்பான SMS உங்கள் தொலைபேசிக்கு வரும். 

(10) குறிப்பிட்ட வாரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளை நீங்கள் பெறாவிட்டால் அடுத்த வாரம் இதை சேர்த்து பெற முடியாது. 

(11) இந்த முறையின் கீழ் சகல CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெறலாம். 

(12) வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தினங்கள் பின்வருமாறு. 

0,1,2 - திங்கள் மற்றும் வியாழன். 
3,4,5 - செவ்வாய் மற்றும் வெள்ளி. 
6,7,8,9 - புதன், சனி மற்றும் ஞாயிறு. 

(13) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது இந்த எரிபொருள் அட்டை நடைமுறைக்கு வந்ததுமே எரிபொருளை விநியோகிக்க தொடங்கும் ஆனால் ஐ ஓ சி (IOC) யானது இந்த அட்டை முறை நடைமுறைக்கு வரும் வரை தற்போதைய முறையிலேயே விநியோகிக்கும். 

உங்கள் வாகனத்தையும் இந்த முறையின் கீழ் பதிவு செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
Fuel Pass தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்... Fuel Pass தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்... Reviewed by Irumbu Thirai News on July 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.