Results for Foreign News

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்!

February 09, 2022

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இதுவரை இருந்துவந்த இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி அதே நாட்டைச் சேர்ந்த கௌதம் அதானி என்பவர்  அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 

Bloomberg தரப்படுத்தலில் அடிப்படையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 88.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டொலர்களாகும்.

 

துறைமுகம், பசுமை எரிசக்தி, சுரங்கம் உட்பட பல வர்த்தக குழுமங்களை வைத்துள்ள அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலும் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

மின்னல் படைத்த உலக சாதனை!

February 08, 2022

மின்னலின் நீளம் மற்றும் அதன் கால அளவுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது அண்மைய ஆண்டுகளில் வியத்தகு முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஐ.நா. வானிலை மற்றும் காலநிலை அதிகாரி ராண்டால் செர்வனி தெரிவித்துள்ளார். 
 
அந்தவகையில் கடந்த 2020ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வெளிப்பட்ட மின்னலானது புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
அதாவது இந்த மின்னலானது இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அதாவது 770 கிலோ மீட்டர் தூரம் வரை இது வானில் தெரிந்துள்ளது. 
 
இந்த நீளமானது 2018-10-31 அன்று பிரேசிலில் பதிவான மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர் அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் படைத்த உலக சாதனை! மின்னல் படைத்த உலக சாதனை! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு

January 15, 2022

கொரோனா பரவலானது பெரும்பாலும் எல்லா நாடுகளினதும் இயல்பு நிலையை பாதித்துள்ளது. 
 
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 
 
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே 

வரக்கூடாது அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த அறிவித்தலின் படி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பான விபரங்களை மும்முரமாக திரட்டி வருகின்றனர். 
 
இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடாது என்ற விடயம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு!

January 04, 2022

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் திரிபானது தற்போது உலகம் பூராவும் பரவிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்த ஓமிக்ரோன் வைரஸ் திரிபை விட அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட வைரஸ் திரிபை 

பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கே முதன்முறையாக இந்த புதிய உருமாறிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் இதே திரிபு கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய திரிபுக்கு I.H.U. B.1.640.2 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்!

December 12, 2021
 

தற்போது வேகமாக பரவி வருகின்ற ஓமிக்ரோன் வைரஸ் திரிபிலிருந்து பாதுகாப்பு பெறும் வழியை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. 
 
அதாவது அமெரிக்க தயாரிப்பான பைஸர் தடுப்பூசியை மூன்று முறை பாவித்தால் ஓமிக்ரோன் வைரஸிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என இஸ்ரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில், 
 
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் ஓமிக்ரோன் திரிபிலிருந்து முக்கிய பாதுகாப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது அந்த விடயத்தை இஸ்ரேல் மருத்துவ ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்!

December 08, 2021

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகநூல் (FB) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை முகநூலில் பதிவிட அனுமதி வழங்கியது தொடர்பில் 

150 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு தளமாக முகநூல் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்!

November 28, 2021

சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன் என்பவர் தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
நடந்தது என்ன? 

அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் என்பவர் தோல்வி அடைந்தார். 
 
அதனைத் தொடர்ந்து ஆளும் சமூக கட்சித் தலைவராக ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அவரை பிரதமராக நியமிப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 
 
இவருக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் கிடைத்ததுடன் 57 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததுடன் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. 
 
சுவீடனின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒருவர் பிரதமராகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க தேவையில்லை. ஆனால் எதிராக 175 வாக்குகள் கிடைக்காமல் இருந்தால் அவர் பிரதமராகலாம். ஆண்டர்சனுக்கு எதிராக 174 வாக்குகளே கிடைத்ததால் அவர் பிரதமரானார். 

இதன் பின்னர் சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஆனால் இவர் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்ததால் கிரீன் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது. 
 
பின்னர் ஆண்டர்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
அந்தவகையில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை மக்டலேனா ஆண்டா்ச ஏற்பட்டுள்ளது.
சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on November 28, 2021 Rating: 5

இரண்டு வான்கோழிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி!

November 21, 2021

அரசியல், சமூக, கலாசார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் (Thanks Giving) நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்த நன்றி தெரிவிக்கும் நாளன்று அமெரிக்கர்கள் வான்கோழி இறைச்சியை 

உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
 
ஆனால் இந்த நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியால் 02 வான்கோழிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்கப்படுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படும் 02 வான்கோழிகளும் நாட்டிலுள்ள விலங்கு காப்பகங்களுக்கு பரிசாக வழங்கப்படும். 
 
அந்த வகையில் இந்த வருடத்திற்கான நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு இரண்டு வான்கோழிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வான்கோழிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி! இரண்டு வான்கோழிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி! Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!

November 03, 2021

பேஸ்புக்கானது அதன் கூட்டு நிறுவனத்தின் பெயரை META என்று அண்மையில் மாற்றியது. தற்போது பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் இடம்பெற்றுள்ளது. 
 
அதாவது  பேஸ்புக்கில் உள்ள Facial Recognition என்ற வசதியை தடை செய்வதற்கு META நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

META வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FB யில் உள்ள Facial Recognition தொழில்நுட்பம் காரணமாக பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டிருந்தன.   

எனவே குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த வசதி நீக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!  ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை!

October 21, 2021

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 
 
அமெரிக்கா, நியூயோர்க் நகரிலுள்ள NYU Langone Health என்ற வைத்தியசாலையிலேயே இந்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாக மூளை சாவு அடைந்த பெண் ஒருவருக்கே அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் இவ்வாறு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. 
 
குறித்த நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக சிறுநீரகம் நிராகரிக்கபடாமல் இருப்பதாகவும் இதுவரை அது நல்ல முறையில் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சிகிச்சை முறை வெற்றியளித்தால் மனித சிறுநீரகங்களை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை! உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை! Reviewed by Irumbu Thirai News on October 21, 2021 Rating: 5

43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்!

October 16, 2021
 

இங்கிலாந்தில் உள்ள தனியார் கொவிட் பரிசோதனை நிலையத்தினால் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை 43,000 பேருக்கு தவறான கொவிட் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளால் கொவிட் பரவல் அதிகரிக்ககும் வாய்ப்புள்ளதால், அரசாங்கத்தினால் குறித்த பரிசோதனை மையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்டவர்களை மீணடும் பரிசோதனையொன்றை மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் ஏன் இவ்வாறு தவறான முடிவுகள் வழங்கப்பட்டதென விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்! 43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்! Reviewed by Irumbu Thirai News on October 16, 2021 Rating: 5

கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு!

October 03, 2021
 

கொவிஷீல்ட் என்பது இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ராசெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆகும். இதனை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து விநியோகித்து வருகிறது. 
 
இந்நிலையில் இது தொடர்பாக அவுஸ்ரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 
 
93 சதவீதம் போராடக்கூடியது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இந்த தடுப்பூசிக்கு அவுஸ்திரேலியா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா!

September 30, 2021
 

நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்தவகையில் ஒக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்குமிடையிலான 
 
Hotline சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
2015 ற்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் அரச மட்ட நேரடி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!

September 27, 2021
 

பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த சிலை தகர்ப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. 

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!  பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்!

September 27, 2021
 

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஓஐசி (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) இஸ்லாமிய உலகத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நியூயார்க்கில் OIC யின் தொடர்பு குழுவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார். 
 
இது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சகல முக்கிய மன்றங்களிலும் இந்தப் பிரச்சினையை OIC உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால் பாகிஸ்தான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாகவே நடைபெற்றது. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், ஹூதி பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார். சூடான் மற்றும் எகிப்துக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினை பற்றியும் பேசினார். லிபியா மற்றும் சிரியா பற்றிப் பேசினார். சவுதிக்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் தொடர்பாகவும் பேசினார். ஈரான் பற்றியும் பேசினார். அணு ஆயுதங்கள் பற்றி கவலை வெளியிட்டார். ஆனால் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுக்கு முக்கியத்துவம் .கொடுத்து இந்த விவகாரத்தை  தவிர்த்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
 
ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி ஐநா பொதுச்சபையில் உரையாற்றுகையில் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஆனால் துருக்கி ஜனாதிபதி எர்தூகான் மாத்திரம் தனது உரையில், 

காஷ்மீர் பற்றி பேசினார். ஆனால் அவரது தொணியும் முன்னரைப் போலல்லாமல் மென்மையாக மாறி இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுவாக கூறிவிட்டார். 
 
காஷ்மீர் பற்றி இதற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் மலேசியாவின் மகாதிர் முஹம்மதும் சர்வதேச மன்றங்களில் பேசி வந்தனர். ஆனால் மஹாதீர் முஹம்மத் தற்போது பதவியில் இல்லை. 
 
பாகிஸ்தானுடனான சவுதி அரேபியாவின் உறவும் பிரச்சினையில்லை. 2018 இல் இம்ரான்கான் பதவிக்கு வந்தபோது 3 பில்லியன் டொலர் கடனாகவும் அதே பெறுமதியுடைய எண்ணையையும் கடனாக பாகிஸ்தானுக்கு சவுதி வழங்கியது. ஆனால் காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது பாகிஸ்தானுக்கு சவுதியின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்காக சவுதி அரேபியா OIC கூட்டத்தை கூட்டவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தி இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த சவுதி அரேபியா தான் வழங்கிய கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துமாறு பாகிஸ்தானிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
எவ்வாறாயினும் OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிலிருந்து பாகிஸ்தான் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்!

September 22, 2021


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, ஏனைய நாட்டு பிரதிநிதிகள் சிலருடன் இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். 
 
இதன் போது அங்குள்ள ஊழியர்கள் அவரிடம், கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை கேட்டுள்ளனர். தான் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை 

என்று அவர் கூற அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
வேறுவழியில்லாமல் பிரேசில் ஜனாதிபதியும் உடன் சென்றவர்களும் வீதியோர உணவகம் ஒன்றில் இரவு நேர சாப்பாட்டை எடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியூயோக் மேயர் பில் டே பலசியோ, பிரேசில் ஜனாதிபதியும் ஏனைய நாட்டு பிரதிநிதிகளும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றும் பாராமல் அங்குள்ள விதிமுறையையே அவர்கள் பின்பற்றியுள்ளமை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! அமெரிக்கா சென்ற பிரேசில் ஜனாதிபதி சந்தித்த அவமானம்! Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி!

September 20, 2021
 

ஆப்கானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் மாத்திரமே பள்ளிக்கு வரலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
 
எவ்வாறாயினும் பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள் 
 
குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவிகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை முடிவு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்த போதிய வசதிகள் இல்லை. எனவே புதிய விதிகளின்படி பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏற்படாது என்று சிலர் தெரிவிக்கின்றனர். 
 
மாணவிகள் பள்ளி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே பெற்றோர்களும் கருதுகின்றனர். 
 
2001ல் தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் கல்வி கற்போர் எண்ணிக்கை, எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 
 
போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30 சதவீதம் வரை அதிகரித்தது. 
 
ஆனால் தலிபான்களின் தற்போதைய இந்த அறிவிப்பால் பெண்களின் உயர்கல்வி தொடர்பில் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இஸ்லாமிய மதச் சட்டம் குறித்த தங்களின் புரிதலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தபோது தாலிபன்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.