ஆப்கானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் மாத்திரமே பள்ளிக்கு வரலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள்
குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவிகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை முடிவு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்த போதிய வசதிகள் இல்லை. எனவே புதிய விதிகளின்படி பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏற்படாது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
மாணவிகள் பள்ளி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவே பெற்றோர்களும் கருதுகின்றனர்.
2001ல் தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் கல்வி கற்போர் எண்ணிக்கை, எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30 சதவீதம் வரை அதிகரித்தது.
ஆனால் தலிபான்களின் தற்போதைய இந்த அறிவிப்பால் பெண்களின் உயர்கல்வி தொடர்பில் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய மதச் சட்டம் குறித்த தங்களின் புரிதலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தபோது தாலிபன்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலிபான்களின் புதிய அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பெண்களின் கல்வி!
Reviewed by Irumbu Thirai News
on
September 20, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 20, 2021
Rating:

No comments: