பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

 

2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இது தொடர்பான பல விடயங்களை தெளிவு படுத்தினார். 
 
அதாவது, 
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக பரீட்சை திணைக்களமும் கடந்த வருடத்திலிருந்து பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. 

எந்த ஒரு மாணவருக்கும் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை எந்த இடத்திலும் பாவிப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது. மீண்டும் கட்டணம் செலுத்தி பெறுபேற்றை பெறவேண்டும் என்ற தேவை இல்லை. வேறு பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்காகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த பெறுபேற்றை பயன்படுத்தலாம். 
 
ஏதாவது பிரச்சினைகள் தொடர்பில் கேட்கப்பட்டால் அது தொடர்பில் பதில் அளிப்பதற்காக நானும் எனது அதிகாரிகளும் நேற்று நள்ளிரவு 12 மணி வரை திணைக்களத்தில் இருந்தோம். அதில் கேட்கப்பட்ட முக்கிய பிரச்சினைதான் தமது பரீட்சை சுட்டெண் மறந்தால் என்ன செய்வது என்பது. அப்படியானவர்கள் தமது 
 
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடலாம். அதுவும் முடியாதவர்கள் எமது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தமது முழுப் பெயரை வழங்கினால் பெறுபேறை அறிவிக்கலாம். 
 
அதே போன்று அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இந்த பெறுபேறுகளை Online முறையில் இன்று காலை முதல் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Username, Password என்பவற்றை பயன்படுத்தி இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். 
 
அதேபோன்று இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு தேவைக்காக அல்லது வேறு தேவைகளுக்காக யாருக்காவது பெறுபேறுகளை பெறவேண்டியிருந்தால் அவர்களுக்கு திங்கட்கிழமை முதல் Online முறையில் பெறுபேறுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! பரீட்சை இலக்கத்தை மறந்த மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.