தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது?

 

ஆசிரியர்களுக்கான மொடியுலில் பங்குபற்றுவது தொடர்பாக தனக்கு ஆசிரியர்களிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முகநூல் காணொளி ஒன்றை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, 
என்னிடம் இது தொடர்பாக அடிக்கடி கேட்கின்றனர். இதைப்பற்றி அவரவர் முடிவெடுக்க வேண்டும். மொடியுலை செய்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு என்ன விளைவு வரும்? செய்யாவிட்டால் என்ன விளைவு வரும்? என அவரவர் புரிந்து கொள்ள வேண்டும். 
 
இந்த விடயத்தில் மனசாட்சிப்படி ஒவ்வொருவரும் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்திவிட்டு எமது பதவி உயர்வுக்கான வேலைகளை செய்வது பொருத்தமா? அவ்வாறு செய்தால் அது மனச்சாட்சிக்கு விரோதமான செயல். 
 
இதுமட்டுமல்லாமல் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை 

தோல்வியடையச் செய்ய எதிர்பார்த்திருக்கும் தரப்பினருக்கு அது வாய்ப்பாகவும் அமையும். அதை வைத்து பிரச்சாரமும் செய்வார்கள். 
 
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் மொடியுல் நடவடிக்கையில் இருந்தும் விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? தொழிற்சங்க நடவடிக்கையில் இருக்கும் போது ஆசிரியர்கள் ஏன் 'மொடியுல்' செய்யக்கூடாது? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.