நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...
irumbuthirai
November 18, 2020
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டத்தை நேற்றையதினம் (17) நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக...
- 5.5% பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார்.
- கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
- 2021 ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்மொழிவு. இதை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
- பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு.
- ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25% ஆல் குறைவடைந்துள்ளது. வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
- பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை.
- விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை 05 வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
- 2021 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50% வருமான வரி சலுகை.
- Covid-19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம்.
- பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் காலநிலை தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படும்.
- சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும்.
- தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
- வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல்
- தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு
- மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை.
- மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி.
- திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி.
- நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 1,500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம்.
- பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை.
- வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை.
- அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கு தடை.
- குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது.
- வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள்.
- சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு.
- சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
- உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி.
- உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
- கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டம்.
- கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள்.
- இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடல்.
- அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7% மாக குறைக்கப்படுகிறது.
- அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு.
- மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும்.
- 25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு,
- இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு.
- கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்.
- இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கம்.
- எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 1,886 பில்லியன் ரூபாவாகும் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3,441 பில்லியன் ரூபா. வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.
- Irumbuthirainews
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...
Reviewed by irumbuthirai
on
November 18, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 18, 2020
Rating:












