கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை:
irumbuthirai
January 04, 2021
அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கடந்த 15 நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அலுவலகத்தின் மருத்துவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் சென்ற மாதம்
19ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உடலை அடையாளம் காட்டுவதற்கு இதுவரை அவரது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்கள் தமது கடமைகளில் இருந்து நேற்றைய தினம் விலகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை:
Reviewed by irumbuthirai
on
January 04, 2021
Rating:
