பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்!
irumbuthirai
June 01, 2021
கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு, சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி நேற்று (31) தீர்மானமொன்றுக்கு வந்தது.
அதாவது கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமிப்பதென கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை 224 பேருடன் இயங்கிய பாராளுமன்ம் தற்போது முழுமையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்!
Reviewed by irumbuthirai
on
June 01, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
June 01, 2021
Rating:












