இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா?


சீனா பங்களாதேஷிற்கு தடுப்பூசியை வழங்கும் விலையைவிட இலங்கைக்கு அதிக விலையில் விற்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. 
15 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளை பெறுவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
அப்படி என்றால் ஒன்றுக்கு 10 டாலர் அறவிடப்படுகிறது. இதேவேளை சீனா இலங்கைக்கு 
15 டொலருக்கு வழங்குகிறது. 
இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கையிலுள்ள சீன தூதரகம் "பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை" என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 
சீனா ஒரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்ன என இலங்கை பிரஜை ஒருவர் வினவியதற்கு, 
இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் பொதுவான காரணியாகும் என பதில் அளித்துள்ளது.
இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.