போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!
irumbuthirai
August 07, 2021
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தாம் முன்னெடுத்துவரும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய எதிர்ப்பு ஊர்வல பேரணியை இன்றைய தினம் (7) தற்காலிகமாக கைவிடுவதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பித்த இந்த பேரணி இன்று பஸ்யாலையில்
வைத்து கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) கொழும்பை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.
இதேவேளை பல தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவே இந்த போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (6) விசேட வைத்திய நிபுணர்களின் சங்கமும் நாட்டின் நிலைமையை கருதிக்கொண்டு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
August 07, 2021
Rating:
