கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு:


நேற்றைய தினம் (4) இடம்பெற்ற அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் கலந்துவிட்டு கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது கைது செய்யப்பட்ட 44 பேரும் உரிய போலீஸ் நிலையங்களில் அல்லாமல் வழமைக்கு மாற்றமாக துறைமுக போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

எனவே அவர்களை பார்வையிடவும் அவர்களுக்கு தேவையான ஆடைகளை வழங்கவும் இன்று காலை துறைமுகத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சென்றனர். 

ஆனால் இவர்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதியும் மறுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகள் அதிலும் 
விசேஷமாக எதிர்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள் என்பவற்றை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதி வழங்கப்படவில்லை. 

சட்டத்தரணிகளும் இந்த விடயம் அரசியல் யாப்பின் பிரகாரம் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எவ்வளவோ வாதாடியும் பயனில்லை. 

நான் பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தினால் அது உங்கள் தொழிலுக்கும் பிரச்சனையாய் அமையும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. உங்கள் உயர் அதிகாரிகளிடம் மீண்டும் கேட்டாவது அனுமதி தாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் வேண்டினார். ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் வந்த குழுவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே கைது செய்யப்பட்ட 44 பேரும் இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.