அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?


24 வருடங்களாக தமக்கு மறுக்கப்பட்ட சம்பளத்திற்கான கோரிக்கை உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் பல நாட்களை கடந்தும் உரிய தீர்வு இன்றி தொடர்கின்றது. 

இதனிடையே கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை சென்று 10 லட்சம் கையொப்பங்களையும் 
திரட்டி எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போராட்டமும் நேற்றைய தினம் கண்டி நகரிலிருந்து ஆரம்பமானது. 

இது மாத்திரமன்றி நேற்று வாகன பேரணி ஒன்றும் கொழும்பு நோக்கி சென்றது. கடவத்த, கொட்டாவ, மொரட்டுவ மற்றும் வெலிசர ஆகிய நான்கு இடங்களில் இருந்து வாகன பேரணி ஆரம்பமானது. 

இவர்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். இவ்வாறு சென்றவர்கள் கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது அதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண் ஆசிரியைகளும் அடங்குவர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அல்லாமல் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். 

இதன் பின்னர் அவர்களை சென்று பார்வையிட சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பல தரப்பினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தை பிரதானமாக சுட்டிக்காட்டி அந்த அனுமதி மறுக்கப்பட்டது. 

இதேவேளை 44 பேருக்கும் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. 

இவர்களை சென்று பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார போன்றோர் இன்று காலை எவ்வளவு முயற்சி செய்தும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இதேவேளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 44 பேரும் தமது சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன? அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.