அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு)


அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்தல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை இன்று (6) அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம்: 02/2021(1V) உடைய இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு. 

ஒவ்வொரு அரச ஊழியரும் கிழமைக்கு குறைந்தது 03 நாட்கள் வருகை தரும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 

ஒரு ஊழியர் வரவேண்டிய தினத்தில் வராவிட்டால் மாத்திரமே அவரது சொந்த லீவில் குறைக்கப்பட வேண்டும். 

நிறுவனத்திற்குரிய உத்தியோகபூர்வ வாகனத்தின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. நிறுவன பிரதானிகள் அவர்களுக்குரிய பொருத்தமான முறையை பின்பற்ற வேண்டும். 

பணிக்கு வருகை தராத நாட்களில் வீட்டிலிருந்து 
Online மூலம் வேலை செய்ய வேண்டும். இதன்போது நிறுவன பிரதானியின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். 

கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகளை கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்கக்கூடாது. 

மேலும் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் மற்றும் வேறு விஷேட நிலைமைகளின் காரணமாக சேவைக்கு வரமுடியாதவர்களை சேவைக்கு அழைத்தல் அல்லது மாற்று ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள நிலையத்தில் பணியை தொடர ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த ஊழியர் பாதிக்காத வகையில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவன பிரதானிக்குரியது. 

ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறல் தொடர்பில் கையொப்பமிடும் வகையில் வரவு பதிவேட்டை பயன்படுத்த வேண்டும். 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக ஒரு ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவருக்கு சம்பளத்துடன் லீவு வழங்கப்பட வேண்டும். 

குறித்த சுற்று நிருபத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.